BREAKING NEWS
latest

Wednesday, November 11, 2020

குவைத் சிவில் ஐடிகள் இனிமுதல் உங்கள் முகவரி தேடிவரும் வசதி அறிமுகம்:

குவைத் சிவில் ஐடிகள் இனிமுதல் உங்கள் முகவரி தேடிவரும் வசதி அறிமுகம்:


நவம்பர்-11,2020

குவைத்தின் சிவில் தகவல் பொது ஆணையம்(PACI) மின்னணு சேவைகள் மற்றும் வசதிகளை மேம்படுத்துவதன் ஒரு பகுதியாக குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினருக்கான சிவில் ஐடி கார்டுகளுக்கான விநியோக நேரடியாக உங்கள் இருப்பிடத்திற்கு வந்து வழங்கும் சேவையை அறிமுகப்படுத்தியது உள்ளது என்று  சிவில் தகவல் பொது ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் Musaed Al-Asousi அவர்கள் அறிக்கையை மேற்கோள்காட்டி பிரபல தினசரி நாளிதழ் சற்றுமுன் செய்தி வெளியிட்டுள்ளது.

சிவில் ஐடி அலுவலத்தில் கூட்டத்தை குறைக்கவும், ஊழியர்களின் வேலை நேரத்தை மிச்சப்படுத்தவும், கொரோனா வைரஸ்தொற்று பரவுவதை தடுத்து அவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சமூக இடைவெளி பராமரிப்பதன் மூலம் நோய் பாதிப்பு  முற்றிலுமாக தவிர்க்க முடியும் என்றார்.

இந்த சேவை வழங்குவதற்கு குவைத்தின்  டெலிவரி துறையில் ஒரு முன்னணி நிறுவனத்துடன் சிவில் ஐடி துறை ஒரு ஒப்பந்தத்தை ஏற்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார். ஒரு சிவில் அடையாள அட்டையை அவர்கள் முகவரியில் வழங்குவதற்கான கட்டணம் இரண்டு தினார்கள், அதே முகவரி உள்ளவர்களுக்கு ஒவ்வொரு கூடுதல் சிவில் ஐடி  அட்டைக்கும் கூடுதல் கால் தினார் சேர்த்து வசூலிக்கப்படும்

கீழே உள்ள சிவில் ஐடி கார்டு டெலிவரி வலைத்தளத்தில் (https: //delivery.paci. Gov.kw)  நீங்கள் Request மூலம் சேவையை கோரலாம், இது மூலம் சிவில் ஐடி கார்டு விநியோகத்தை கண்காணிக்க முடியும். ஆயத்த சிவில் ஐடிகள் நிறுவனத்திற்கு மாற்றப்பட்ட நாளிலிருந்து இரண்டு வேலை நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட நபருக்கும் அவருடைய முகவரிக்கு சென்று வழங்கப்படும் என்று அவர்  கூறினார்.

சிவில் ஐடிகள் பாதுகாப்பான மற்றும் தனிப்பட்ட முறையில் வழங்கப்படுவதை உறுதிசெய்ய சிவில் ஐடி துறை ஆர்வமாக உள்ளது, அதற்காக அவை சீல் செய்யப்பட்ட உறை ஒன்றில் அதிகாரத்தின் சின்னத்துடன் வழங்கப்படுகின்றன என்றும்,பழைய சிவில் ஐடி கைவசம் இல்லாத நிலையில், சம்பந்தப்பட்ட நபர் புதிய சிவில் அடையாள அட்டையைப் பெறுவதற்கு தேவையான ஆவணங்களை விநியோக நிறுவனத்தின் பிரதிநிதிக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

Reporting by Ktpnews.

Add your comments to குவைத் சிவில் ஐடிகள் இனிமுதல் உங்கள் முகவரி தேடிவரும் வசதி அறிமுகம்:

« PREV
NEXT »