குவைத்தில் இன்று புதிய சாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது:
நவம்பர்-7,2020
குவைத் புதிய சாலையினை இன்று(சனிக்கிழமை) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது ஆறாவது ரிங் சாலையில் நாளுக்குநாள் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களைக் குறைக்கும் முயற்சியில் அப்துல்லா அல்-முபாரக் பகுதியில் இருந்து சனிக்கிழமை நெடுஞ்சாலை திறக்கப்போவதாக தெரிவித்துள்ளது.
புதிய 6.5 கி.மீ நெடுஞ்சாலை, குவைத்தின் சாலை நெட்வொர்க் விரிவாக்க உள்கட்டமைப்பு திட்டங்களின் ஒரு பகுதியாகும். வளர்ந்து வரும் சபா அல்-சேலம் பல்கலைக்கழக நகரம் உள்ளிட்ட அருகிலுள்ள பகுதிகளையும் இந்த சாலை இணைக்கிறது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் டாக்டர்.ராணா அல்- ஃபரீஸ் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
மேல் குறிப்பிட்ட சாலை திட்டத்தின் மிக முக்கியமான பகுதியை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு ஒரு நாள்(நேற்று) முன்னதாக தனது அமைச்சகத்தின் முயற்சியை அவர் பாராட்டினார்.
ஆறாவது மற்றும் ஏழாவது ரிங் சாலைகளுக்கு இடையில் அமைந்திருக்கும் இந்த நெடுஞ்சாலை குவைத்தின் அப்துல்லா அல்-முபாரக் பகுதிகள், சபா அல்-சலீம் பல்கலைக்கழக நகரம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளுடன் இணைக்கிறது.