குவைத்தில் கடந்த இரண்டு நாட்களில் மழை;வரும் தினங்களில் குளிர் துவங்கும்:
நவம்பர்-12,2020
குவைத்தில் கடந்த இரண்டு நாட்களாக, குறிப்பாக எல்லைப்புற பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. ஆனால் மக்கள் வசிக்கும் பகுதிகளில் அந்த அளவுக்கு காணமுடியவில்லை. இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரையில் பலத்த காற்று மற்றும் பலத்த மழையை பெரும்பாலான பகுதிகளில் காணப்பட்டது.
இது நாட்டின் காலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தைக் குறிக்கிறது, இதையடுத்து வரும் நாட்களில் குவைத்தின் வானிலை மெதுவாக குளிர்ச்சியாக மாறும் என்பதற்கான அறிகுறியாகும். தற்போதைய வெப்பம் மற்றும் குளிர் காலநிலை இந்த மாத இறுதிக்குள் கணிசமாக குறைந்த எல்லா வருடமும் போல குளிர்காலத்திற்கு மாறும். இதற்கிடையே நேற்று தூசி காற்று சில இடங்களில் பதிவாகியுள்ளன, ஆனால் விபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை. இந்த மாத இறுதிக்குள், வெப்பநிலை கணிசமாகக் குறையும் டிசம்பரில் குளிர் தீவிரமடையும், வழக்கம் போல் ஜனவரி ஆண்டின் குளிர்ந்த மாதம் ஆகும்.
மேலும் குவைத் வானிலை மையம் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் சிதறிய இடி மழைக்கு வாய்ப்புள்ளது எனவும். அதுபோல் காற்று மணிக்கு 50 கி.மீ வீசுவதற்கு வாய்ப்புள்ளது எனவும், இதனால் தூசி படலம் ஏற்பட்டு தெரிவுநிலை(தூரப்பார்வை) குறையவும், கடல் அலையின் உயரம் 6 அடிக்கு மேல் இருக்கலாம் எனவும் தெரிவிதித்துள்ளது.
Editing: Ktpnews Official