குவைத்தில் இரண்டாம் கட்ட பகுதி ஊரடங்கு என்ற திட்டம் திரும்பப் பெற வாய்ப்பு:
குவைத் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமான இருந்தை அடுத்து, அந்த நேரத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சுகாதார அமைச்சகம் நாட்டில் மீண்டும் பகுதிநேர ஊரடங்கு உத்தரவு விதிப்பது உள்ளிட்ட கடுமையான திட்டங்களை முன்வைத்தது. இருப்பினும் 6 முதல் 10 வாரங்களுக்கு சுகாதார நிலையை மதிப்பிட்ட பிறகு இந்த முடிவு போதுமானது என்று பெரும்பான்மை அமைச்சரவை உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.
ஆனால் சமீபத்திய நாட்களில் நாட்டில் பதிவான கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து வருவது, ஊரடங்கு உத்தரவை என்ற திட்டத்தை நிறுத்தி வைக்க சுகாதார அமைச்சகத்தை தூண்டியுள்ளது. முக்கியமாக இந்த வாரம் முதல், நோயின் சராசரி பரவல் அளவும் குறைந்து வருகிறது, மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கையை விட இறப்பு விகிதங்களும் குறைவாக வருகிறது.
நவம்பர் மாதத்தில் நாட்டில் இந்த நோய் பரவுவது கணிசமாக அதிகரிக்கும் என்று சுகாதார அமைச்சகம் கவலை கொண்டிருந்தது. ஆனால் இந்த வாரம் முதல், நிலைமை கட்டுக்குள் இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளன, இத்துடன் உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் கிடைத்தால் அடுத்த மாதம் மேலும் 10 லட்சம் டோஸ் கோவிட் தடுப்பூசி நாட்டிற்கு வரும்.
இந்த அனைத்து காரணிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், நாட்டில் ஊரடங்கு உத்தரவை மீண்டும் விதிக்க வேண்டியதன் அவசியத்தை சுகாதார அமைச்சகம் கைவிடும் என்று தெரிகிறது. ஆனால், குளிர்காலம் துவங்கியுள்ள நிலையில் வரும் நாட்களில் நாட்டில் ஏற்படும் நோய்பரவல் வீதத்தைப் பொறுத்தது இறுதி முடிவு எடுக்கப்படும்.