கொரோனா மூலம் பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள வீட்டுத் தொழிலாளர்களை திருப்பி அழைக்க அமைச்சரவை ஒப்புதல்:
நவம்பர்-11,2020
குவைத்தில் இருந்து தாயகம் சென்று பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள வீட்டுத் தொழிலாளர்களை திருப்பி அழைப்பதற்கு குவைத் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று குவைத் தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.மேலும் அந்த செய்தியில் அமைச்சரவை கவுன்சில் வீட்டுத் தொழிலாளர்கள் திரும்பி வருவதற்கு ஒப்புக் கொண்டதை அடுத்து துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான அனஸ் அல்-சலே தலைமையிலான கொரோனா அவசரக் குழுவிற்கு, தொழிலாளர்கள் பாதுகாப்பாக திரும்புவதற்கு தேவையான நடைமுறைகளை செயல்படுத்துவதற்கான அறிக்கையைத் தயாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார் என்றும் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்காக சுகாதார அமைச்சர் பசில் அல்-சபா அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் செயல்படுத்தல் திட்டத்தை ஒருங்கிணைத்து மறுஆய்வு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து, இன்று நடக்கும் கூட்டத்திற்கு தலைமை தாங்கி விவாதிப்பார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.மேலும் இந்த கூட்டத்தில் வீட்டுத் தொழிலாளர்களின் பாதுகாப்பாக குவைத் திரும்புவதற்கு தேவையான நிபந்தனைகளை இறுதி செய்வதும், செல்லுபடியாகும்(Validity Visa) விசா உள்ளவர்கள் மட்டுமே திரும்பி வர அனுமதிக்குமா, அல்லது சில வீட்டுத் தொழிலாளர்களின் காலாவதி விசாகளை ஆன்லைனில் புதுப்பிக்க ஸ்பான்சர்கள் அனுமதிப்பதா என்பதையும் உள்ளிட்டவையும் இந்த கூட்டத்தின் நோக்கமாகும்.
தொடர்ந்து கொரோனா பிரச்சினை குறைவான உள்ள குவைத்தில் நுழைய தடை இல்லாத நாடுகளில் இருந்து புதிய வீட்டுத் தொழிலாளர்களை நேரடியாக கொண்டுவருவது தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என்றும், பின்னர் ஒரு விரிவான அறிக்கை கொரோனா அவசரக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும், மேலும் திரும்புவதற்கு தேவையான நடைமுறைகளைச் செயல்படுத்துவதற்கும் அமைச்சரவைக்கு இறுதி அறிக்கை வழங்குவதும் இந்த கூட்டத்தின் நோக்கமாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.