BREAKING NEWS
latest

Monday, November 30, 2020

குவைத்தில் பத்திரிகை துறையின் உரிமையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு:

குவைத்தில் பத்திரிகை துறையின் உரிமையில்  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு:


Nov-30,2020

குவைத்தில் பெரும்பாலும் பல செய்திகளிலும் சம்மந்தப்பட்ட நபர்களின் பெயர் விபரங்கள் வெளியிடுவதில்லை மாறாக இந்த நாட்டைச் சேர்ந்தவர் என்று மட்டுமே குறிப்பிடுவது வழக்கம். சில கிரிமினல் வழக்குகள் உள்ளிட்ட முக்கிய  வழக்குகளில் மட்டும் பெயர் விபரங்கள் வெளியாகும். இந்நிலையில் பத்திரிகை துறைக்கு புத்துணர்ச்சி அளிக்கும் விதத்தில் புதிய உத்தரவை நீதிமன்ற பிறப்பித்துள்ளது. அந்த தீர்ப்பில் அரசு ஆவணங்கள் அடிப்படையில் தனிநபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு ஊடகங்களில் நேர்மையான செய்திகளை வெளியிடுவது குற்றம் அல்ல என்று குவைத் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தனிநபர்களின் பெயர்களை வெளியிடுவதன் மூலம்  ஊடகங்கள் அவர்களை குற்றவாளிகளாக சித்தரிப்பதாக அர்த்தமல்ல, மாறாக உத்தியோகபூர்வ ஆவணங்களின் அடிப்படையில் உண்மைகளை வெளிப்படுத்துகிறது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த  தீர்ப்பை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அப்துல்லா அல் உஸ்மான் வழங்கினார். முன்னர் அரசாங்க பொறியியலாளர் தாக்கல் செய்த வழக்கில் குற்றவியல் நீதிமன்றம் முன்பு ஒரு செய்தித்தாளின் தலைமை ஆசிரியரை விடுவித்தது குறிப்பிடத்தக்கது 

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பு ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் விதமாக  அரசியலமைப்பு சட்டத்தில் பொறிக்கப்பட்ட உரிமைகளைஎடுத்துக்காட்டுகிறது என்று வழக்கறிஞர்களும், வல்லுனர்களும் கருத்து தெரியவந்துள்ளனர். பொது நலன் சார்ந்த விஷயங்களில் உண்மையைப் பாதுகாப்பதிலும் நிலைநிறுத்துவதிலும் ஊடகங்களின் பங்கு ஈடு இணையற்றது என்றும், நீதிமன்றத்தின் தீர்ப்பு இதை அங்கீகரிப்பதாகவும் அவர்கள் மேலும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில், நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட சில முக்கிய செய்திகளை ஊடகங்கள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் Public Prosecution தடை விதித்துள்ள சில பிரிவுகள் தவித்து, எந்தவொரு செய்தியையும் வெளியிட ஊடகங்களை இந்த தீர்ப்பு  அனுமதிக்கும் என்று முக்கிய வழக்கறிஞரான பஹத் அல்-ஹதாத் தெரிவித்துள்ளார்.



Add your comments to குவைத்தில் பத்திரிகை துறையின் உரிமையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு:

« PREV
NEXT »