குவைத்தில் வாகனங்களை நொடிப்பொழுதில் கண்டறியும் அதிநவீன கேமிராக்கள் பயன்பாட்டில் வருகிறது:
நவம்பர்-9,2020
குவைத்தில் நாட்டில் முதல் முறையாக புதிய அதிநவீன கேமராக்களை சாலைகளில் நிறுவ உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது என்று மூத்த அமைச்சக வட்டாரங்களை மேற்கோள் காட்டி தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கேமிராக்கள் மூலம் வாகனங்கள் இயக்கங்கள் மற்றும் நம்பர் பிளேட்டுகளை நொடிப்பொழுதில் அடையாளம் காணமுடியும்.
இந்த கேமராக்கள் சில நிமிடங்களில் நூற்றுக்கணக்கான வாகனங்களின் நம்பர் பிளேட்டு தட்டுகளைப் படித்து(Read),பின்னர் தட்டு எண் மற்றும் காரின் நிறத்தை சேமித்து வைக்கலாம், மேலும் வாகனத்தின் இருப்பிடம்(Geographical location) ,தேதி மற்றும் நேரம் ஆகியவை தரவுத்தளத்தில் சேமித்து வைத்து பின்னர் எப்போது வேண்டுமானாலும் , எதாவது பிரச்சனை நேரத்தில் பயன்படுத்த முடியும்.
அந்த அதிநவீன கேமராக்களை சாலைகளில் உள்ள போக்குவரத்து விளக்குகள் அல்லது சாலை உள்ள Location பலகைகள் மீதும் முடியும் என்று ஆதாரங்கள் சுட்டிக்காட்டின. ஒருபுறம் இந்த கேமராக்கள் மீறல்களைக் கண்காணிக்கவும், மறுபுறம் வாகனங்களின் இயக்கத்தைக் கண்காணிக்கவும் உதவும்.
அந்த கேமராக்களைக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்துறை அமைச்சகத்திற்கு ஒப்புதல் கிடைத்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.ஒப்பந்தத்தின் மதிப்பு 788,700 தினார் ஆகும் மேலும், ஒப்பந்தத்தை செயல்படுத்தும் நிறுவனம் தேவைப்படும்போது உள்துறை அமைச்சகத்திற்கு நான்காவது தலைமுறை (4 ஜி) தேவைகளையும் வழங்கும் என்பது கூடுதல் தகவல்.