செல்லுபடியாகும் விசாகள் கைவசம் உள்ளவர்கள் குவைத் திரும்புவதற்கு எந்த பிரச்சினையும் இல்லை:
நவம்பர்-10,2020
குவைத் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட முடிவின்படி (MoI),செப்டம்பர் 1, 2019 முதல் நாட்டை விட்டு வெளியேறிய அனைத்து வெளிநாட்டினரும் குவைத் திரும்ப அனுமதிக்கப்படுகிறார்கள், அவர்கள் ஆறு மாதங்களுக்கும் மேலாக நாட்டிற்கு வெளியே இருந்திருந்தாலும், அவர்களுக்கு செல்லுபடியாகும் விசா இருந்தால் திரும்புவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் வழியே இயங்கும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அதற்கான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட பட்டியல் நாடுகளில் உள்ளவர்கள் 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை வெறு எதாவது ஒரு நாட்டில் கழித்த பின்னர் குவைத்தில் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் நேரடியாக நுழையும் 34 நாடுகள் தடை பட்டியல் மேலும் அறிவிக்கப்படும் வரை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
குவைத் சர்வதேச விமான நிலையம் 30 சதவீத திறன் கொண்ட வணிக விமானங்களை மட்டுமே தற்போது முதல் கட்டத்தில் இயக்கி வருகிறது. நாள் ஒன்றுக்கு மொத்தம் 100 வருகை மற்றும் புறப்படும் விமானங்கள் சுகாதாரத்துறை வழிகாட்டுதல் அடிப்படையில் இயக்கப்படுகிறது.கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளைத் தடுக்க பல ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கை எடுத்ததால், சில விமான நிலையங்கள் மூடப்படும் விளிம்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சுகாதார அதிகாரிகள் புதிய வழிமுறைகளைப் பெறும் வரை, முதல் கட்டத் திட்டம் 2021 ஜனவரி 31 வரை தொடரும், மேலும் சுகாதார அமைச்சினால் வழங்கப்படும் அனைத்து பரிந்துரைகளுக்கும் முடிவுகளுக்கும் விமான நிலைய அதிகாரிகள் கடமைப்பட்டுள்ளனர். ஐரோப்பா நாடுகளில் இருந்து புறப்படும் விமானங்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 80 ஆகும், அதாவது 40 புறப்படும் மற்றும் 40 வருகை தரும் என்பது குறிப்பிடத்தக்கது.