பஹ்ரைனின் உலகின் மிக நீண்ட காலம் பணியாற்றிய பிரதமர் கலீஃபா பின் சல்மான் உடல் அடக்கம் செய்யப்பட்டது:
உலகின் மிக நீண்ட காலம் பிரதமராக பணியாற்றிய இளவரசர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபாவை அவரது உடல் அமெரிக்காவிலிருந்து நேற்று புதன்கிழமை கொண்டுவரப்பட்டது. கலீஃபா அவர்கள் பஹ்ரைன் நாடு 1971-ல் பிரிட்டனில் இருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து
தன்னுடைய மாமா கிங் ஹமாத் பின் ஈசா அல் கலீஃபாவின் ஆட்சி காலம் முதல் தற்போது வரையில் பிரதமராக பணியாற்றினார். பஹ்ரைன் நாட்டை அல்-கலீஃபா குடும்பம் 1783 முதல் ஆட்சி செய்து வருகிறது. கலீஃபா அவர்கள் மறைவையொட்டி சிறிய வளைகுடா நாடான பஹ்ரைனின் புதிய பிரதமராக கிரீடம் இளவரசர் சல்மான் பின் ஹமாத் அல் கலீஃபாவை(வயது-51), மன்னர் கிங் ஹமாத் புதன்கிழமை நியமித்தார்.
இன்று சற்றுமுன் நடைபெற்ற உடல் நல்லடக்க நிகழ்வில் கொரோனோ வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை அடிப்படையில் அரச குடும்ப உறுப்பினர்கள், பஹ்ரைன் பாதுகாப்பு படை, உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய காவல்படையின் மூத்த பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஒரு சிறிய நிகழ்வாக ரிஃபாவில் உள்ள ஹுனைனியா கல்லறை தோட்டத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது என்று மாநில செய்தி நிறுவனம் பி.என்.ஏ தெரிவித்துள்ளது.
Editor: Ktpnews Official