குவைத் மன்னர் அவர்கள் கொரோனாவுக்கு எதிராக போராடும் சுகாதாரத்துறை ஊழியர்களை சந்தித்தார்:
Nov-16,2020
தன்னுடைய நாட்டில் கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் சுகாதாரத்துறை பணியாளர்கள் உள்ளனர் என்று அமீர் ஷேக் நவாஃப் அகமது அல் சபா அறிவித்தார். மேலும் மிகவும் அபாயங்கள் மற்றும் சவால்கள் நிறைந்த நிலையிலும் சிறந்த முறையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு நாட்டிற்கு சேவை செய்ததற்காக சுகாதார ஊழியர்களை அவர் பாராட்டினார்.
குவைத் மன்னர் அவர்கள் இன்று(திங்கட்கிழமை) காலை சுகாதாரத்துறை அமைச்சக தலைமையகத்தை பார்வையிட்ட போது இவ்வாறு பேசினார். சுகாதாரத்துறை அமைச்சர் ஷேக் டாக்டர்.பசில் அல் சபா, சுகாதார அமைச்சரக துணை செயலாளர்.முஸ்தபா முகமது ரதா மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் அமீரை வரவேற்றனர்.
கொரோனா வைரஸின் சூழலில், உலகம் அசாதாரண சூழ்நிலைகளை கடந்து செல்கிறது. இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் நமது தாய்நாடு காட்டிய அசாதாரண ஒற்றுமையும், சிகிச்சைத் துறையில் செய்த சாதனைகளும் எந்தவொரு நெருக்கடியையும் எதிர்கொள்ள நாம் தயாராக உள்ளோம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது என்றார்
மறைந்த அமீர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-சபா தேசத்திற்கு செய்த சேவைகளை அவர் நினைவு கூர்ந்தார், மேலும் அவர் நடத்தி சென்ற பாதையை பின்தொடர்ந்து தன்னுடைய சேவைகள் அனைத்தும் இருக்கும் என்று உணர்வுப் பூர்வமாக தெரிவித்தார்.