குவைத் இந்தியர்களுக்கு இலவச சட்ட ஆலோசனை புதிதாக மேலும் பல வழக்கறிஞர்கள் பெயர்கள் சேர்ப்பு:
நவம்பர்-9,2020
குவைத்தில் உள்ள பல்வேறு வழக்கறிஞர்களின் அலுவலகங்களில் பணிபுரியும் இந்திய வழக்கறிஞர்கள் சிலர்,இந்தியர்களுக்கு இலவச சட்ட ஆலோசனைகளை வழங்க முன்வந்துள்ளனர் என்று இந்திய தூதரகம் ஒரு அறிக்கையில் கடந்த நவம்பர்-1,2020 அன்று தெரிவித்த தகவலை ktpnews தளத்தில் வெளியிட்டோம்.
அந்த தேதியில் தளத்தில் வெளியிட்ட செய்தி விரிவாக பார்க்க இந்த Link-ஐ Click செய்யுங்கள்: https://ktpnews.blogspot.com/2020/11/blog-post.html
தூதரகத்தின் இந்த சேவை மூலம் பலர் பயனடைந்த நிலையில் இலவச சட்ட ஆலோசனை வழங்குவதற்கு உள்நாட்டு(குவைதிகள்) வழக்கறிஞர்கள் சிலர் முன்வந்த நிலையில் அவர்கள் விபரங்களை சேர்த்து வழக்கறிஞர்கள் குழுவை தூதரகம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்தியை இந்திய தூதரகம் இன்று சற்றுமுன் திங்கட்கிழமை(09/11/2020) அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது.
இலவச சட்ட ஆலோசனை பெற விரும்பும் இந்தியர்கள் cw.kuwait@mea.gov.in என்ற தூதரகத்தின் மின்னஞ்சல் முகவரில் தொடர்பு கொள்ளலாம். இதையடுத்து கிடைக்கும் பதில் நகலுடன் இந்த வழக்கறிஞர்களை சந்தித்து இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம்.
New List(குவைத் வழக்கறிஞர்கள்)
(இந்த புகைப்படம் தெளிவான தெரிய இதன் மேல் ஒரு Click செய்யவும்)
Old List(குவைத்தில் உள்ள இந்திய வழக்கறிஞர்கள்)
(இந்த புகைப்படம் தெளிவான தெரிய இதன் மேல் ஒரு Click செய்யவும்)