BREAKING NEWS
latest

Saturday, November 28, 2020

குவைத் வானிலை மையத்தின் தினசரி அறிக்கை; இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு:

குவைத் வானிலை மையத்தின் தினசரி அறிக்கை; இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு:



Nov-28,2020

குவைத் வானிலை ஆய்வு மையம் இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஓரளவு மேகமூட்டமான வானிலையே நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் காற்று வடகிழக்கு இருந்து தென்கிழக்கு மாறி மிதமாக வேகத்தில் மணிக்கு 12 - 45 கிமீ இடைவெளியில் வீசும் , பகல் நேரங்களில் சிதறிய மழைக்கும் அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது

இரவைப் பொறுத்தவரை, மேகமூட்டமான வானிலை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எதிர்பார்க்கிறது, அதே நேரத்தில் தெற்கில் இருந்து தென்கிழக்கு வரை காற்று மிதமான வேகத்தில்  மணிக்கு 12 - 42 கிமீ / இடைவெளியில் வீசும் மற்றும்  சிதறிய அளவில் மழைக்கு வாய்ப்பு, இது சில நேரங்களில் இடியுடன் கூடிய மழையாகவும் மாறும்.

நாட்டின் பிராந்தியங்களுக்கு(இடங்களுக்கு) ஏற்ப 25 டிகிரி முதல் 17 டிகிரி வரை வெப்பநிலை எதிர்பார்க்கப்படுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Add your comments to குவைத் வானிலை மையத்தின் தினசரி அறிக்கை; இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு:

« PREV
NEXT »