குவைத்தில் தடை எப்போது நீங்கும் என்ற உத்தேச விபரம் தற்போது வெளியாகியுள்ளது:
Nov-18,2020
குவைத்தில் தடை விதித்துள்ள இந்தியா, இலங்கை உள்ளிட்ட 34 நாடுகளைச் சேர்ந்தவர்கள் குவைத்தில் நுழைய தடை நீக்கம் நடைமுறையில் வருவதன் மூலம், வேலை வரும் ஒவ்வொரு நபரும் ஆள் ஒன்றுக்கு 280 முதல் 420 தினார்கள் வரையில் செலவு செய்ய வேண்டியது இருக்கும், தங்குமிடம் மற்றும் 3 நேர உணவு உட்பட நாள் ஒன்றுக்கு 20 முதல் 30 தினார்கள் வரையில் செலவு ஆகும் என்று சம்மந்தப்பட்ட துறைகளை மேற்கோள் காட்டி குவைத்தின் பிரபல தினசரி நாளிதழ் இன்று (18-11-2020)மாலையில் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அந்த செய்தியில் இப்படி குவைத்தில் நுழையும் நபர்களுக்கு சுகாதார அமைச்சகத்தால் ஏற்பாடு செய்துள்ள தனிமைப்படுத்தல் மையங்களில் அல்லது ஹோட்டல்களில் இடங்கள் ஒதுக்கப்படும்.
மேலும் அந்த அறிக்கையில் தடைசெய்யப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் குவைத்தில் நுழைய அனுமதிப்பது மற்றும் விமானங்கள் நாட்டில் நுழைய வான்வெளியைத் திறப்பது ஆகியவை அடுத்த இரண்டு வாரங்களில் அல்லது குவைத்தில் நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு உடனடியாக அனுமதி அளிக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என்று செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதவிர தாயகத்தில் இருந்து குவைத் வருகிறது விமானப் பயணச்சீட்டு கட்டணம் தனியாக வழங்க வேண்டிய நிலையில், சாதாரண தொழிலாளர்கள் குவைத்தில் நுழைவது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. இதற்கிடையே கொரோனா காரணமாக பகுதிநேர விமான சேவைகள் வழங்கிவந்த குவைத் விமான நிலையம் நேற்று நவம்பர்-17 முதல் ,மீண்டும் 24 மணிநேர விமான சேவைகளை வழங்கத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் குவைத்தில் வருகிற டிசம்பர்-5 அன்று பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.