குவைத்தில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் தமன் மருத்துவமனை இயக்கத்தில் வரும்:
குவைத்தில் உள்ள சுகாதார காப்பீட்டு மருத்துவமனை நிறுவனத்தின் கீழ் உள்ள தமன்(Daman Hospitals) மருத்துவமனைகள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் செயல்பட துவங்கும் என்று குவைத் தினசரி பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
இத்தகைய மருத்துவமனைகள் திறக்கப்படுவதால், புதிய கட்டாய சுகாதார காப்பீடு 130 தினார்கள் மதிப்பில் அனைத்து வெளிநாட்டினருக்கும் கிடைக்க வழிவகை ஏற்படும். குவைத்தில் பல்வேறு தனியார் துறையில் பணிபுரியும் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் இரண்டு மில்லியன் மக்களுக்கும் அவர்களது குடும்பத்தினரும் தமன் மூலம் பயனடைவார்கள். இருப்பினும், அரசு ஊழியர்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்களுக்கான தற்போதைய சுகாதார காப்பீட்டின் திட்டம் தொடரும்.
பல்வேறு வகையான பரிசோதனைகள் கட்டணம் இன்றி செய்யவும், எக்ஸ்ரேக்கள், நோய்தொற்று கண்டறியும் ஆய்வக பரிசோதனை , வெளி நோயாளிகள் கிளினிக்குகள், மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை மற்றும் பிற சேவைகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவ செலவுகளை காப்பீடு உள்ளடக்கி இருக்கும்.இது தவிர, ஒவ்வொரு வருகைக்கும் தனித்தனி ஆலோசனைக்கு இரண்டு தினார்கள் வசூலிக்கப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.