BREAKING NEWS
latest

Sunday, November 22, 2020

குவைத்தில் முதல் கொரோனா தடுப்பூசி சுகாதாரத்துறை அமைச்சருக்கு செலுத்தப்படும்:

குவைத்தில் முதல் கொரோனா தடுப்பூசி சுகாதாரத்துறை அமைச்சருக்கு செலுத்தப்படும்:

Nov-22,2020

குவைத்தில் கொரோனா தடுப்பூசி வந்தபின் முதல் தடுப்பூசி சுகாதார அமைச்சர் டாக்டர் பசில் அல் சபாவின் உடலில் செலுத்தப்படும் என்று அமைச்சக வட்டாரங்கள் மேற்கோள்காட்டி பிரபல தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சரின் இந்த நடவடிக்கை நாட்டில் உள்ள  ஒவ்வொரு குடிமகனுக்கும் சமூகத்துக்கும் தடுப்பூசி போடுவதன் அவசியம் மற்றும் தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்த தெளிவான ஒரு விழிப்புணர்வு மக்களின் மத்தியில் ஏற்படுத்த உதவும் என்றும் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைசரிடமிருந்து ஒரு மில்லியன் தடுப்பூசிகள் அடுத்த மாதம் குவைத்துக்கு வந்து சேரும். இந்த தடுப்பூசி பரிசோதிக்கப்பட்டு உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டவுடன் இவை குவைத்திற்கு வந்து சேரும். மேலும் இந்த தடுப்பூசி மைனஸ் 80 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சேமிக்கப்பட வேண்டும். இந்த தடுப்பூசிக்கா சிறப்பாக வடிவமைத்துள்ள குளிரூட்டப்பட்ட விமானத்தில்  குவைத்துக்கு அனுப்பப்படும்.

இதே போன்று இந்த மருந்துகளை சேமித்து வைக்கும் வசதிகள் நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன. முதலில்  சுகாதார ஊழியர்கள், முதியவர்கள் மற்றும் நீண்ட கால நோயாளிகளுக்கு தடுப்பூசி போடப்படும் என்று தெரிகிறது. இருப்பினும், தடுப்பூசி பெற நாட்டில் உள்ள யாரையும் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Add your comments to குவைத்தில் முதல் கொரோனா தடுப்பூசி சுகாதாரத்துறை அமைச்சருக்கு செலுத்தப்படும்:

« PREV
NEXT »