குவைத் இந்திய தூதர் சிபி ஜார்ஜ் இன்று முபாரக் அல்-கபீரின் ஆளுநரை சந்தித்தார்:
நவம்பர்,10,2020
குவைத்தின்முபாரக் அல்-கபீர் ஆளுநரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான Mahmoud Bushehri உடன் சந்திப்பு நடத்தினார் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் ஓமன் நாட்டின் குவைத் தூதுவர் Saleh bin Amer Al Kharousi அவர்களுக்கும் ஆளுநரை சந்தித்தார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
ஆளுநர் புஷேரி, குவைத் மற்றும் ஓமான் நாடுகளின் தூதுவர்களை வரவேற்பு செய்தார். நாடுகளுக்கிடையிலான உறவுகளின் ஆழத்தை அவர்கள் கலந்துரையாடலின் போது உறுதிப்படுத்தினார். இதையடுத்து இந்திய தூதர் சிபி ஜார்ஜ் விருந்தோம்பலுக்கு நன்றி மற்றும் பாராட்டுகளைத் தெரிவித்தார், மேலும் குவைத்தில் இருந்து தங்கள் நாட்டு மக்களுக்கு சேவை செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.
குவைத் எப்போதுமே எந்தவொரு மனிதாபிமான பணிக்கும் ஆதரவளிக்க முன் வரிசையில் இருப்பதை சுட்டிக்காட்டினார் மற்றும் உலகில் எங்கும் உள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளுக்காக மறைந்த அமீர் ஷேக் சபா அல்-அஹ்மத் அவர்களுக்கு ஐக்கிய நாடுகள் வழங்கிய விருதை அவர் நினைவு கூர்ந்தார்.
இதுபோல் இந்திய தூதர் சிபி ஜார்ஜ் கடந்த வாரங்களில் Jahra மற்றும் Al Asimah ஆளுநரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.