குவைத் பொதுமன்னிப்பு தொடர்பான நாளை முதல் இந்திய தூதரகத்தில் சிறப்பு கவுண்டர் திறக்கப்படும்:
குவைத்தில் டிசம்பர் 1 முதல் அறிவிக்கப்பட்ட அபராதத்துடன் கூடிய பொது மன்னிப்பு தொடர்பாக 26/11/20 இன்று(வியாழக்கிழமை) நண்பகல் முதல் குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் சிறப்பு கவுண்டர் திறக்கப்படும் என்று இந்திய தூதர் சி.பி.ஜார்ஜ் தெரிவித்தார். அவர் இந்திய தூதரகத்தில் புதன்கிழமை(25/11/20) நடைபெற்ற Open House நிகழ்ச்சி பேசும் போது இதை தெரிவித்தார்.
ஏற்கனவே அவசர சான்றிதழ்( Emergency Pass) அதாவது அவுட் பாஸ் பெற்றவர்கள் இதற்காக மீண்டும் புதிதாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டியதில்லை. அவர்கள் செய்ய வேண்டியது தூதரகத்திற்குச் சென்று அவர்களின் அவுட்பாஸ் காலாவதியை புதுப்பிப்பது செய்தால் மட்டுமே போதுமானது. இதற்காக எளிய நடைமுறைகள் மூலம் விரைவாக செய்து தரப்படும்.
பொதுமன்னிப்பு தொடர்பான குவைத் உள்துறை அமைச்சக செய்தி விரிவாக படிக்க இங்கே Click செய்யவும் Link:https://ktpnews.blogspot.com/2020/11/nov-242020-241120.html
முன்னதாக அவசர சான்றிதழ்களை(Emergency Pass) வாங்கியவர்கள் தங்கள் விசாவை சட்டப்பூர்வமாக மாற்றி மீண்டும் நாட்டில் தங்க விரும்பினால் தங்களுக்கு நாட்டை விட்டு வெளியேற வழங்கப்பட்ட (Emergency Pass) அதாவது அவுட் பாஸ் திரும்பப் பெற்று, அதற்கு பதிலாக புதிய பாஸ்போர்ட்டைப் பெறவும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
தற்போது, தொழில் சட்டத்தை மீறி குவைத்தில் தங்கியுள்ள தொழிலாளர்கள் குடியிருப்பு அனுமதிக்கு(Validity Visa) விண்ணப்பிக்கவோ அல்லது நாட்டை விட்டு வெளியேறவோ விரும்பினால் அவர்கள் இதுநாள் வரையில் உள்ள அபராதம் செலுத்தினால் மட்டுமே முடியும். இந்த அறிவிப்பு தொடர்பாக குவைத் அதிகாரிகளிடம் மேலும் கூடுதல் தெளிவாக விளக்கம் பெறப்போவதாக அவர்(தூதுவர்) கூறினார். இந்த வாய்ப்பை சட்டத்திற்கு புறம்பாக குவைத்தில் தங்கியுள்ள அனைத்து இந்தியர்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் அவர் கூறுகையில் இந்த கொரோனா சூழ்நிலையில், ஒரு மாதத்திற்கு ஒரு முறை Open House நிகழ்வு நடத்தப்படும் என்றார். நேற்று அதாவது புதன்கிழமை(25/11/20) நடந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் இருந்து குவைத்தில் வேலைக்கு வந்துள்ள பொறியாளர்கள் எதிர்கொள்ளும் சான்றிதழ்கள் சான்றளிப்பு தொடர்பான எதிர்கொள்ளும் சிக்கல்களும் இந்த நிகழ்வில் தீர்வு தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்த பிரச்சினையை தீர்க்க குவைத் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று தூதர் சி.பி.ஜார்ஜ் தெரிவித்தார்.