BREAKING NEWS
latest

Tuesday, November 17, 2020

அமீரகத்தில் அபராதம் தள்ளுபடி; இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி நாட்டைவிட்டு வெளியேறலாம்:

அமீரகத்தில் அபராதம் தள்ளுபடி;இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி நாட்டைவிட்டு வெளியேறலாம்:


Nov-17,2020

ஐக்கிய அரபு எமிரேட்டில் காலாவதியான சுற்றுலா அல்லது வதிவிட விசாக்கள் வைத்திருக்கும் மக்கள் இந்த ஆண்டு இறுதி வரை அபராதம் செலுத்தாமல் நாட்டை விட்டு வெளியேறலாம் என்று அதிகாரிகள் சற்றுமுன் அறிவித்துள்ளனர். கோவிட -19 நோய்தொற்று பரவல் காரணமாக ஆறு வாரங்களுக்கு கூட பொது மன்னிப்பு காலத்தை நீட்டித்து அறிவித்தது. கடந்த மே 14 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட குறுகிய கால பொதுமன்னிப்பு இன்று நவம்பர் 17-ஆம் தேதியுடன் முடிவடையவிருந்தது.

இந்நிலையில் அமீரக அடையாள மற்றும் குடியுரிமைக்கான ஆணையம் (ICA) வெளியிட்டுள்ள அறிக்கையில் சட்டவிரோதமாக வசிப்பவர்கள், மார்ச் 1-ஆம் தேதிக்கு முன்னர் விசாக்கள் காலாவதியானதால், டிசம்பர் இறுதிக்குள் அல்லது அதற்கு முன்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வெளியே முடிந்தால் அபராதம் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் வேலை இழந்த அல்லது மார்ச் 1-க்குப் பிறகு விசா காலாவதியானவர்களுக்கு இது நீட்டிக்கப்படாது என்றார்.

மேலும் எமிரேட்ஸ் ஐடிகள் மற்றும் பணி அனுமதிகள் சம்பந்தப்பட்ட அனைத்து அபராதங்களும் மற்றும்  கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என்று ICA-யின் வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் துறைமுகங்களுக்கான இயக்குநர் மேஜர் ஜெனரல் சயீத் ரகன் அல் ரஷிடி கூறினார். இதற்காக நாட்டின் தலைமைக்கு நன்றி தெரிவித்த மேஜ்-ஜெனரல் அல் ரஷிடி, விசா மீறல்களில் உள்ளவர்கள் அவர்களின் நிலையை சட்டப்பூர்வமாக்க மற்றொரு வாய்ப்பை வழங்குவதற்கான இந்த நீட்டிப்பு வருகிறது என்றார். 

Add your comments to அமீரகத்தில் அபராதம் தள்ளுபடி; இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி நாட்டைவிட்டு வெளியேறலாம்:

« PREV
NEXT »