குவைத் இந்திய தூதர் அவர்கள் அறிவிப்பு மீண்டும் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்வு தொடக்கம்:
நவம்பர்-13,2020
குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்தியர்கள் பயன்பெறும் வகையில் ஓபன் ஹவுஸ்(குறை கேட்கும் நிகழ்வு) அடுத்த வாரம் முதல் மீண்டும் தொடங்கும் என்று தூதர் சி.பி.ஜார்ஜ் தெரிவித்தார். இந்திய தூதரகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்டகாலமாக செயலற்ற நிலையில் இருந்த ஓபன் ஹவுஸ் நிகழ்வு சி.பி.ஜார்ஜ் தூதரக பதவியேற்ற நிலையில், கடந்த ஆகஸ்டில் முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது. இந்த நிகழ்வு வாரத்திற்கு ஒரு ஓபன் ஹவுஸ் என்ற விகிதத்தில் மூன்று முறை நடத்திய போது,கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் இடைநிறுத்தப்பட்டது.
இந்த மூன்று ஓபன் ஹவுஸ் நிகழ்வு போது தூதரகத்திற்கு புகார் அளிக்க வருபவர்களுக்கு இலவசமாக மதிய உணவு, வசதி இல்லாத இந்திய தொழிலாளர்களுக்கு டாக்ஸி கட்டணம் வழங்குவது உள்ளிட்ட பல முக்கியமான தொண்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
கோவிட் சூழலில் இடைநிறுத்தப்பட்ட ஓபன் ஹவுஸ் திட்டம் மீண்டும் தொடங்கப்படுவதால், குவைத்தில் வசிக்கும் இந்திய மக்களின் பிரச்சினைகளை தூதரகத்தில் முன்வைக்கும் வாய்ப்பு மீண்டும் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Editor: Ktpnews Official