குவைத்தில் உள்ள இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெற்றோர்கள் கவனத்திற்கு எச்சரிக்கை:
Nov-15,2020
குவைத்தில் குழந்தை குற்றவாளிகள் எண்ணிக்கையில் அதிகரித்து வருகிறது என்றும் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொள்கிறார்கள்.
தற்போது வரையில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட குழந்தைகள் சம்மந்தப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை 845 என்று குழந்தைகள் பாதுகாப்பு பிரிவின் தலைவர் லெப்டினன்ட் கேணல் Saud al-Ameer அவர்கள் தெரிவித்தார்.
சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் குழந்தைகளுக்கு ஆபத்தானவை என்றும் இது குறித்து பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குவைத்தில் சிறுவர் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட கடுமையான சட்டம் இயற்றப்பட்ட பிறகு சிறுவர்கள் துஷ்பிரயோக வழக்குகளின் எண்ணிக்கையில் குறைந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதில் மிகவும் முக்கியமானது குழந்தைகளின் பாலியல், உடல் மற்றும் உளவியல் ரீதியான துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகள் என்று அவர் தெளிவுபடுத்தினார்.