குவைத்துக்கு சிறப்பு ஜெட் மூலம் கொரோனா தடுப்பூசி மருந்து கொண்டுவரப்படும்:
நவம்பர்-15,2020
குவைத்திற்கு கொண்டுவரும் கொரோனா வைரஸ் நோய்தொற்று தடுப்பூசி மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சேமிக்கப்பட வேண்டும். இதற்காக அமெரிக்காவில் உள்ள தடுப்புச் மருந்து தயாரிக்கும் மருந்து தொழிற்சாலையில் தடுப்பூசி கைமாறும் நேரம் முதல் நாட்டில் கொண்டுவந்து அதன் பயன்படுத்துவது வரை ஒவ்வொரு கட்டத்திலும் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான ஒரு திட்டத்தை சுகாதார அமைச்சகம் தயாரித்து வருகிறது.
கொரோனா தடுப்பூசியைப் பாதுகாப்பாக வைத்திருக்க குளிர்பதன அமைப்பு பொருத்தப்பட் சிறப்பு ஜெட் மூலம் இவை நாட்டிற்கு கொண்டுவந்து, விமான நிலையத்திலிருந்து அதே குளிர்பதன அமைப்பு பொருத்தப்பட்ட பெட்டிகளில் நேரடியாக சுகாதார அமைச்சின் சபாஹான் சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்படும். மேலும் இந்த சேமிப்பு வசதியில் போதுமான வெப்பநிலை கட்டுப்பாட்டு அமைப்புகள் அமைத்து பாதுகாக்கப்படும், மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி அனுப்பி வைப்பது மற்றும் பயன்படுத்தும் நேரம் வரையிலான செயல்முறை கடுமையான கண்காணிப்பு மற்றும் சோதனைக்கு உட்படுத்தப்படும்
சுகாதார அமைச்சின் வட்டாரங்களின் தகவல்கள் அடிப்படையில் தொற்று நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகளை வாங்குவதற்கான சர்வதேச நாடுகளின் வரையறை அடிப்படையில் சிறந்த தரத்தில் கண்டிப்பாக இதன் அனைத்து கட்டணங்களும் கண்காணிப்படும். குவைத் சுகாதார அமைச்சகம் 10 லட்சம் டோஸ் தடுப்பூசியை பெறுவதற்காக ஃபைசர் நிறுவனத்துடன் முதல்கட்ட ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. கடந்த வாரம், தடுப்பூசி சோதனை 90 சதவீதம் வெற்றிகரமாக இருப்பதாக நிறுவனம் கூறியுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலுக்குப் பிறகு இந்த தடுப்பூசி இறக்குமதி செய்யப்படும். இது அடுத்த மாதத்திற்குள் சாத்தியமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.