BREAKING NEWS
latest

Wednesday, November 4, 2020

குவைத்தில் பகுதிநேர ஊரடங்கு இரண்டு வாரங்களுக்கு அமுல்படுத்த அமைச்சர் பரிந்துரை:

குவைத்தில் பகுதிநேர ஊரடங்கு இரண்டு வாரங்களுக்கு அமுல்படுத்த அமைச்சர் பரிந்துரை:


நவம்பர்-4,2020

குவைத்தில் இரண்டு வாரங்களுக்கு 2-ஆம் கட்டமாக பகுதிநேர ஊரடங்கு கொரோனா வைரஸ் பரவல்  மீண்டும் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் நடைமுறை படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை நெறிமுறைகளை நேற்று(செவ்வாய்) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் பசில்-அல்-சபா சமர்ப்பித்தார் என்று குவைத்தின் பிரபல தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 6 முதல் 10 வாரங்களுக்குப் பிறகும் தற்போது உள்ள அளவிலேயே நாட்டில் கொரோனா நோய்தொற்று பரவல் தொடர்ந்தால் அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.

இந்த பகுதிநேர ஊரடங்கு உத்தரவு இரவு 9 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நடைமுறையில் இருக்கும்படி உத்தரவு விதிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் நோய் அதிகம் பரவுகின்ற மாகாணங்களில்(Governorates) பகுதிகளில் முழு நேர ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் குவைத் நாட்டிற்கு வருகை தரும் வணிக விமான சேவைகள்(பயணிகள் விமானம்), ஷாப்பிங் காம்ளக்ஸ், வணிக வளாகங்கள், சுகாதார மையங்கள் போன்றவர்களின் செயல்பாடுகளை நிறுத்தப்படவேண்டும் என்றும், உணவகங்களுக்குள் சாப்பிடுவதை தடை செய்து, வீட்டு விநியோக சேவை மட்டும் (Home Delivery) அனுமதிக்க வேண்டும் என்ற வழிமுறைகளை மீண்டும் நடைமுறையில் கொண்டுவர  அமைச்சரவையின் பரிசீலனைக்கு குவைத் சுகாதாரத்துறை அமைச்சர்  சமர்ப்பித்தார்.

இது தவிர உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டிய பரிந்துரைகள்:

வணிக மையங்கள் உட்பட மக்கள் அதிகமான வந்து செல்லும் இடங்களின் வேலை நேரத்தை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை குறைக்கவும். உணவகங்களில் முன்கூட்டியே அனுமதி பெறும் வசதி ஏற்படுத்துதல் மற்றும் அவற்றின் சேவை  நேரங்களை இரவு 9 மணி வரை என்று  மட்டுப்படுத்துதல், உடற்பயிற்சி மையங்களில் நுழைவதற்கான முன்கூட்டியே அனுமதி பெறுதல், சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாத நிறுவனங்களுக்கு பூட்டு போடுதல் மற்றும் தொடர்ச்சியான இதேபோன்று விதிமுறைகளை மீறினால் பெருந்தொகை அபராதம் விதத்தில்,  விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் பொதுமக்கள் பார்ப்பதற்கு அனுமதிக்க கூடாது, குளிர்கால துவங்கும் நிலையில் தற்காலிக  கூடாரங்களை அமைப்பதற்கு தடை செய்வது உள்ளிட்டவை உடனடியாக அமல்படுத்த சுகாதார அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.

Add your comments to குவைத்தில் பகுதிநேர ஊரடங்கு இரண்டு வாரங்களுக்கு அமுல்படுத்த அமைச்சர் பரிந்துரை:

« PREV
NEXT »