குவைத்தில் இடையிடையே ஏற்படும் நிலநடுக்கங்கள் எதிர்காலத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்:
Nov-16,2020
குவைத்தில் இடையிடையே ஏற்படும் சிறிய அளவிலான பூகம்பங்கள் எதிர்காலத்தில் பெரிய அளவிலான பூகம்பங்கள் ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பதை புவியியல் ஆய்வுகளை மேற்கொள்ளும் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றன. கடந்த இரண்டு வாரங்களில் 1.6 ரிக்டர் முதல் 4.6 ரிக்டர் வரையிலான நிலநடுக்கங்கள் குவைத்தில் ஏற்பட்டது.
குவைத்தில் இந்த ஆண்டில் இதற்குள் 3 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் இதன் அதிர்வுகளை உணர்ந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும், குவைத்தின் புவியியல் அமைப்பு வலுவான பூகம்பங்களுக்கு ஆளாக வாய்ப்பில்லாத நிலநடுக்க பெல்ட்களிலிருந்து வெகு தொலைவில் உள்ளது.
எண்ணெய் துறை சார்பில் கச்சா எண்ணெய் எடுக்க துளையிடும் போது நிகழும் செயல்முறைகள் நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதன் ஒரு முக்கிய காரணமாகும். எண்ணெய் எடுக்க போடப்படும் துளைகள் வழியே எண்ணெய்க்கு பதிலாக தண்ணீரை நிலத்தில் செலுத்துவதே இதற்குக் காரணம் என்று அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுவரையில் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கங்களின் அதிகபட்ச அளவு 4.8-க்கும் குறைவாக உள்ளது.
இருப்பினும், எதிர்காலத்தில் இன்னும் கடுமையான பூகம்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது, இதனால் இது குறித்து ஆராய்ச்சி தேவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். குவைத்தில் கடைசியாக நிலநடுக்கம் இந்த மாதம் நவம்பர் 11,2020 அன்று ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.6 இருந்தது, பூகம்பத்தின் மையப்பகுதி நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள Al-Manaqeesh பகுதிகளில் UmmQadir என்ற இடத்தில் பூமிக்கு அடியில் ஏற்பட்டது. மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதை நாளிலும் மற்றும் நவம்பர் 12,2017 யிலும் குவைத்தை நிலநடுக்கம் உலுக்கியது.