குவைத்தில் இந்த வாரம் மழையின் இரண்டாம் அலை எதிர்பார்க்கப்படுகிறது:
Nov-30,2020
குவைத்தில் இந்த வாரமும், கடந்த வாரத்தை போல மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர் ஜமால் இப்ராஹிம் தெரிவித்தார், இந்த மழை செவ்வாய்க்கிழமை தொடங்கி வியாழக்கிழமை வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில் டிசம்பர் 1-ஆம் தேதிக்குள் நாட்டில் மேகமூட்டம் படிப்படியாக அதிகரிக்கும் மற்றும் காற்று தென்கிழக்கு நோக்கி வீசும் எனவும், காற்றின் வேகம் மணிக்கு 10 முதல் 40 கிலோமீட்டர் வரையில் மிதமான இருக்காலம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக சிதறிய இடியுடன் கூடிய மழை உருவாகும் என்று அவர் கூறினார். கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட கனமழை போல் இருக்காது என்றும் என்றும், அதைவிட குறைவாகத்தான் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.