குவைத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை வெற்றிகரமாக தடுக்கப்பட்டது:
Nov-17,2020
குவைத் நாடு கோவிட்டின் இரண்டாம் அலையை வெற்றிகரமாக தடுத்தது என்று மதிப்பீடு, நவம்பரில் கோவிட்டின் இரண்டாவது அலை குவைத்திலும் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் குவைத் அந்த சவாலை வென்று வெற்றிகரமாக கடந்துச் செல்கிறது, தற்போது ஐரோப்பிய நாடுகள் உட்பட பல இடங்களிலும் கோவிட்டின் இரண்டாவது அலைகள் பதிவாகியுள்ளது. இதற்கிடையே இந்த குறிப்பிடத்தக்க சாதனையை குவைத் செய்துள்ளது.
புதிதாக பதிவாகும் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் மரணங்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து, அவசரகால பிரிவில் உள்ள நபர்களின் எண்ணிக்கையும் குறைந்தது வருகிறது. கடந்த மாதங்களில் குவைத்தில் நிலவிய உயர் வளிமண்டல வெப்பநிலையும் ஒரு ஆசீர்வாதம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வரவிருக்கும் மாதங்களில் குளிர்ந்த வானிலை காரணமாக கோவிட் பரவுவது அதிகரிக்கும் என்று எதிர்பார்த்து அவசரப்படாவிட்டாலும் கள-மருத்துவமனைகள்(தற்காலிகமாக மருத்துவமனைகள்) இன்னும் குவைத்தில் இயங்குகின்றன.
குவைத்துக்கு நவம்பர் மாதம் முக்கியமானதாக இருக்கும் என்று சுகாதார அமைச்சகம் முன்னர் எச்சரித்திருந்தது, ஆனால் வரும் நாட்களில் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கவும் சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றவும்
வேண்டுகோள் விடுத்துள்ளது. குவைத்திற்கு தடுப்பூசி வந்து நோய்தொற்று வழக்குகள்
பூஜ்ஜியத்தை அடையும் வரை கட்டுப்பாடுகளை நீக்கக்கூடாது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.