குவைத் மன்னர் மற்றும் இந்திய பிரதமர் ஆகியோர் ஜோ-பைடன், கமலா ஹாரிஸ்க்கு வாழ்த்து தெரிவித்தனர்:
மன்னர் வாழ்த்து:
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ-பைடன் மற்றும் துணைத் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் ஆகியோரை உயர்நிலை அமீர் ஷேக் நவாஃப் அல் அஹ்மத் அல் சபா வாழ்த்தினார்.
https://twitter.com/kuna_ar/status/1325161672374366210?s=19
ஷேக் நவாஃப் அவர்கள் குவைத்திற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான வரலாற்று மற்றும் உறுதியான உறவுகளை நினைவு கூர்ந்த அதே வேளையில், பல்வேறு துறைகளில் அமெரிக்காவுடனான உறவுகள் மற்றும் கூட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், இரு நாடுகளின் உறவை பரந்த எல்லைகளுக்கு விரிவுபடுத்துவது குறித்து ஆர்வமாக எதிர்பார்ப்பதாக கூறினார்.
இரண்டு நடப்பு நாடுகளுக்கிடையேயான நெருங்கிய உறவுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதியின் ஆரோக்கியத்திற்கும், அவருடைய அதிக வளர்ச்சிக்கும் மன்னர் வாழ்த்தியுள்ளார். மேலும் மகுட இளவரசர் ஷேக் மிஷால் அல் - அஹ்மத் அல் - ஜாபர் அல் - சபா, பிரதமர் ஷேக் சபா கலீத் அல் - ஹமத் அல் - சபா ஆகியோர்கள் ஜோ-பைடன் மற்றும் கமலா ஹாரிஸ்க்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மோடி வாழ்த்து:
இதுபோல் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
https://twitter.com/narendramodi/status/1325145433828593664?s=19
https://twitter.com/narendramodi/status/1325145671742054400?s=19
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், துணை அதிபராக இருந்த போது, இந்திய - அமெரிக்க உறவில் ஜோ பைடனின் ஒத்துழைப்பு மிக சிறப்பாக இருந்தது என்றும், தற்போது அவர் அதிபராக வெற்றி பெற்றதன் மூலம் இந்திய - அமெரிக்க உறவு புதிய உச்சத்துக்கு செல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதேபோல் துணை அதிபராக வெற்றி பெற்றுள்ள கமலா ஹாரீசுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.