BREAKING NEWS
latest

Friday, November 27, 2020

குவைத்தில் தடை நீங்கிய பிறகு புதிதாக நுழையும் இவர்களுக்கு தனிமைப்படுத்தலின் தேவை இருக்காது:

குவைத்தில் தடை நீங்கிய பிறகு புதிதாக நுழையும் இவர்களுக்கு தனிமைப்படுத்தலின் தேவை இருக்காது:

Nov-27,2020

குவைத்தில் இந்த வருட இறுதியுடன் கோவிட் தடுப்பூசி கிடைப்பதால், வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு தற்போது குவைத் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில் மாற்றங்கள் செய்ய  அமைச்சகம் திட்டமிடுகிறது என்ற புதிய செய்தி வெளியாகியுள்ளது.

இந்த வருடத்தின் இறுதி முதல் தடுப்பூசி உலகளவில் கிடைப்பதால், வெளிநாட்டிலிருந்து நாடு செல்லும்(குவைத் வருகிற) பயணிகள் பி.சி.ஆர் சான்றிதழுக்கு பதிலாக, தங்கள் நாட்டில் வைத்து தடுப்பூசி போட்டதற்காக சான்றிதழை விமான நிலைய அதிகாரிகளிடம் காட்டினால் போதுமானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதன் மூலம் அந்தந்த நாடுகளில் இருந்து தடுப்பூசி போடப்பட்ட பின்னர் நாட்டிற்கு வருபவர்கள் தனிமைப்படுத்தலில் தங்க வேண்டியதில்லை. இருப்பினும், தடுப்பூசி போடாமல் நாட்டிற்குள் நுழைபவர்கள் பி.சி.ஆர் சான்றிதழ் வழங்க வேண்டும் மற்றும் தற்போதுள்ளது போல் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.

ஆனால் புதிய நடவடிக்கை நாட்டை விட்டு வெளியேறுபவர்களுக்கு பொருந்தாது. அந்தந்த நாடுகளின் சுகாதார வழிகாட்டுதல்களின்படி அவர்கள் பயணிக்க முடியும். நாட்டில் தடுப்பூசி கிடைத்ததும், தடைசெய்யப்பட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். டிசம்பர் 5 குவைத்  நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு இது தொடர்பான இறுதி வடிவம்(முடிவு) எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Add your comments to குவைத்தில் தடை நீங்கிய பிறகு புதிதாக நுழையும் இவர்களுக்கு தனிமைப்படுத்தலின் தேவை இருக்காது:

« PREV
NEXT »