குவைத்தில் சட்டத்திற்கு புறம்பாக உள்ள குறிப்பிட்ட சிலருக்கு விசா புதுப்பித்தல் செய்ய வாய்ப்பு கிடைக்கலாம்:
நவம்பர்-8,2020
குவைத்தில், சில வகையான குடியிருப்பு சட்டத்தை மீறுபவர்கள் தங்களின் விசாகளை புதுப்பித்தல். அதை பயன்படுத்தி தொடர்ந்து குவைத்தில் வேலை செய்யும் விதத்தில் சட்டப்பூர்வமாக்க அனுமதிக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி வேலைவாய்ப்பு ஒப்பந்தம் (Ethanamal)
வழங்கப்பட்ட பின்னர் அடுத்தடுத்த நடவடிக்கைகளை முடிக்கத் தவறியதன் மூலமும், முந்தைய குடியிருப்பு பதிவு நடைமுறைகளின்படி அபராதத் தொகையை செலுத்தி, தொடர்ந்து நடவடிக்கைகள் முடிக்க தவறியவர்களுக்கு
விசா புதுப்பித்தல் செய்ய வாய்ப்பு கிடைக்கும்.
இதேபோல், குடியிருப்பு பதிவு நடைமுறைகளின் படி வேலைவாய்ப்பு ஒப்பந்தம் வழங்கப்பட்ட பின்னர் அபராதம் செலுத்தப்படாதது அல்லது அடுத்தடுத்த நடவடிக்கைகள் காரணமாக சட்டத்தை மீறியதாகக் கண்டறியப்பட்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாக வாய்ப்பை வழங்க அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
குவைத் தொழிற்துறை பிரிவின் தொழில்நுட்பத் துறையால் இப்படிபட்ட நபர்களின் கோப்புகளை(ஆவணங்கள்) ஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது அமைச்சக வட்டாரங்கள் மேற்கோள்காட்டி உள்ளூர் அரபு நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது
முன்னதாக, உள்துறை அமைச்சர் அனஸ்-அல்-சலே 2020 ஜனவரி 2 ஆம் தேதிக்கு முன்னர் வரையில் விசா தொடர்பான சட்டங்களை மீறுபவர்களுக்கு விசா புதுப்பித்தல் உள்ளிட்ட எந்தவொரு வாய்ப்பும் வழங்கபடாது என்று தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல், உள்துறை அமைச்சகம் அபராதம் அல்லது தண்டனை இன்றி நாட்டை விட்டு வெளியேறும் சட்டவிரோத தொழிலாளர்களுக்கு ஒரு மாதம் பொது மன்னிப்பு வழங்கியது. அரசாங்கத்தின் செலவில் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனால் 25,000 க்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டனர்.
அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2020 க்கு முன்னர் உள்ள புள்ளிவிவரங்கள் படி நாட்டில் தற்போதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 90,000-ற்கும் அதிகமானவர்கள் சட்டத்திற்கு புறம்பாக நாட்டில் வாழ்கின்றனர். இந்த வாய்ப்பு எப்போது நடைமுறையில் வரும் என்பது வரும் நாட்களில் தெரியவரும்.