BREAKING NEWS
latest

Monday, November 23, 2020

குவைத்தில் தமிழர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்:

குவைத்தில் தமிழர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்:


Nov-23,2020

குவைத்தில் ஹர்தியா பகுதியில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தவர் அலாவூதீன். இவர் இந்தியா தமிழகம் மயிலாடுதுறை மாவட்டம்,தரங்கம் பாடி தாலுக்கா,வேலம்புதுக்குடி எனும் ஊரை சேர்ந்த மர்ஹீம் ரஹமத்துல்லாஹ் அவர்களின் மகன் ஆவார். 

இந்நிலையில் கடந்த சில தினங்களாக உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 21-11-2020 அன்று இரவு 7-30 மணியளவில் உயிரிழந்தார் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் இவருடைய உடலை நல்லடக்கம் செய்வதற்காக அரசு சார்ந்த நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது என்றும், அந்த நடவடிக்கைகள் முடிந்த பின்னர் தேதி மற்றும் நாள் அறிவிக்கப்படும் என்று ஓட்டுநர்கள் சேவை மையம் அமைப்பு அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.


Add your comments to குவைத்தில் தமிழர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்:

« PREV
NEXT »