BREAKING NEWS
latest

Thursday, November 26, 2020

குவைத்தில் முதன்முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது:

குவைத்தில் முதன்முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது:

(Photo: Official Source)

Nov-16,2020

குவைத்தில் முதன்முறையாக நேற்று(26/11/20) புதன்கிழமை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது என்று சுகாதார அமைச்சர் பசில் அல் சபா டிவிட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டார்.

அறிக்கையில் 60-வயதான குவைத் குடிமகன் ஒருவர் கல்லீரல் செயல்பாடு கடுமையாக பாதித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அவரால்  உயர் சிக்கிசைக்காக வேறு எந்த நாட்டிற்கு செல்ல முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது. 

தொடர்ந்து  மற்றொருவர் தானமாக வழங்கிய கல்லீரல் மூலம் சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள Adan மருத்துவமனையில் வைத்து, குவைத் மருத்துவ குழுவினர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடித்தனர் எனவும், இது நாட்டில் முதல் முறையாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வரலாறு நடவடிக்கையில் பங்கேற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்களுக்கு சுகாதார அமைச்சர் பசில் அல் சபா வாழ்த்து தெரிவித்தார். 

அதே நேரத்தில் அமீர்  ஷேக் நவாப் அல் அகமது அல் சபா, இளவரசர் ஷேக் மிஷ் அல் அகமது அல் சபா மற்றும் பிரதமர் ஷேக் சபா அல் காலித் அல் சபா ஆகியோர் சுகாதார அமைச்சரையும், நாட்டின் சுகாதாரத் துறையில் செய்த சரித்திர சாதனைக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Add your comments to குவைத்தில் முதன்முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது:

« PREV
NEXT »