துபாய் ஆட்சியாளருக்கு கொரோனா சோதனை தடுப்பூசி போடும் வாய்ப்பு இந்திய செவிலியருக்கு கிடைத்தது:
நவம்பர்-7,2020
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவரும் பிரதமரும் மற்றும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமுக்கும் நேற்று முன்தினம் கோவிட் தடுப்பூசிக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட செய்தி சமூக ஊடகங்களில் வெளியானது அது குறித்த கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
துபாயில் அரசு செவிலியராக வேலை செய்யும் இந்தியரான ஷோஷம்மா குரியகோஸ் (வால்சம்மா) ஒருபோதும் நினைத்ததில்லை கோவிட் வேலைகளுக்கு(சேவைக்கு) இடையில் இது போன்று வி.வி.ஐ.பிக்கு ஊசி போடும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் நினைத்து பார்த்து இல்லை என்றார்.
ஷேக் முகமதுவின் அரண்மனையில் வைத்து அவருக்கு தடுப்பூசி போடப்பட்ட அந்த நிமிடங்கள் தன்னால் மறக்க முடியாது என்று ஷோஷாமா கூறினார். அந்த நேரத்தில் அவர் தன்னிடம் நலம் விசாரித்தார் எனவும் மற்றும் சுகாதார ஊழியர்களின் பணியைப் அவர்கள் வெகுவாக பாராட்டினார் என்றார்.ஷோஷாமா கேரளா மாநிலம் குமிளி அனவிலசம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுகாதார அமைச்சர் அப்துல் ரஹ்மான் பின் முகமது அல் ஓவைஸுக்கு கடந்த செப்டம்பர் நடுப்பகுதியில் முதல் ஊசி போடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து, பல அமைச்சர்களுக்கு தடுப்பூசி போட வாய்ப்பு வழங்கப்பட்டது. இறுதியாக, துபாய் ஆட்சியாளருக்கு தடுப்பூசி போடுவதற்கான வாய்ப்பு நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. ஷோஷம்மா 1992 இல் துபாய் வந்தார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சுகாதாரத் துறையில் வேலை கிடைத்தது குறிப்பிடத்தக்கது.