BREAKING NEWS
latest

Wednesday, November 11, 2020

குவைத்தில் நாட்டில் சட்டத்திற்கு புறம்பாக உள்ள நபர்களுக்கு இறுதி வாய்ப்பு பயன்படுத்துகள்

குவைத்தில் நாட்டில் சட்டத்திற்கு புறம்பாக உள்ள நபர்களுக்கு இறுதி வாய்ப்பு பயன்படுத்துகள்:


நவம்பர்-11,2020

குவைத்தின் துணை பிரதமரும் மற்றும்  உள்துறை மந்திரி அனஸ்-அல்-சலே இன்று வெளியிட்ட அறிக்கை 2020 ஜனவரி 1-ஆம் தேதிக்கு முன்பு முதல்  குவைத்தில் வசிக்கும் சட்டத்திற்கு புறம்பாக உள்ளவர்கள் அபராதம் செலுத்தி தாயகம் திரும்பவோ அல்லது நிபந்தனைகளுக்கு உட்பட்டு தங்களுடைய தொழில் விசாகள் சரிய செய்யவோ உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்காக காலக்கெடு டிசம்பர் 1,2020 முதல் டிசம்பர் 31,2020  வரை ஆகும்.

இதன்படி, 2020 ஜனவரி 1-ஆம் தேதிக்கு முன்னர் நாட்டில் உள்ள அனைத்து குடியிருப்புச் சட்டங்களையும் மீறிய வெளிநாட்டு தொழிலாளர்கள் அனைவரும் அபராதத்துடன் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் அல்லது நிபந்தனைகளுக்கு உட்பட்டு விசா சரிசெய்து  தொடர்ந்து வேலை செய்யலாம். இதற்காக, நீங்கள் ஃபர்வானியா தாஜீஜில் உள்ள குடிவரவுத் துறை அதிகாரிகளை அணுக வேண்டும்.

இறுதி வாய்ப்பாக குவைத் உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ள இந்த வாய்ப்பை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு ஆயுளுக்கும் குவைத் நாட்டிற்கு திருப்ப முடியாதபடி நிரந்தரமாக தடை விதித்து தங்கள் நாடுகளுக்கு அனுப்பப்படும் என்று உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. அரசின் புதிய முடிவு சட்டத்திற்கு புறம்பாக உள்ள  60,000  வீட்டுத் தொழிலாளர்கள் உட்பட சுமார் 130,000 வெளிநாட்டவர்களுக்கு பயனளிக்கும் என்று அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன

முன்னர் சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்த வெளிநாட்டினர் அபராதம் அல்லது தண்டனை இன்றி நாட்டை விட்டு வெளியேற இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் 30 வரை நாட்டில் பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டது. அவர்கள் தாயகம்  திரும்பும் டிக்கெட்டுகளுக்கும் அரசாங்கம் பணம் செலுத்தியது. அப்போதும் கூட சுமார் 25,000 பேர் மட்டுமே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Reporting by: Ktpnews Official 

Add your comments to குவைத்தில் நாட்டில் சட்டத்திற்கு புறம்பாக உள்ள நபர்களுக்கு இறுதி வாய்ப்பு பயன்படுத்துகள்

« PREV
NEXT »