குவைத்தில் மோட்டார் வாகனங்களுக்கான வருடாந்திர காப்பீட்டு தொகையின் வீதம் திருத்தப்பட்டுள்ளது:
Nov-25,2020
குவைத்தில் உள்ள மோட்டார் வாகனங்களுக்கான ஆண்டு பிரீமியத்தின் வீதம் திருத்தி, புதிய கட்டணத்தை காப்பீட்டுத் துறை ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்தது.
1) இதன்படி, தனியார் வாகனங்களுக்கான ஒரு வருட கட்டாய காப்பீடு தொகை 17.5 தினாருக்கும் 20.5 தினார்களுக்கும் இடையில் இருக்கும். இதே பிரிவின் கீழ் உள்ள வாகனங்களுக்கு, இரண்டு வருடங்களுக்கு 35 தினார்கள் முதல் 41 தினார்கள் வரை மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு 52 முதல் 61 தினார் வரை என்ற விகிதத்தில் காப்பீடு கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும்.
2) டாக்சிகளுக்கான வருடாந்திர காப்பீட்டு பிரீமியம் 21.5 தினார் முதல் 27.5 தினார்கள் வரை இருக்கும். இது இரண்டு வருடங்களுக்கு 43 தினார்கள் முதல் 55 தினார் வரை இருக்கும்.
3) இதுபோல் 8 முதல் 20 இருக்கைகள் கொண்ட போக்குவரத்து வாகனங்களுக்கான வருடாந்திர காப்பீட்டு பிரீமியம் 33 தினார்கள் முதல் 57 தினார்கள் வரை இருக்கும். இது இரண்டு வருடங்களுக்கு 66 தினார்கள் முதல் 114 தினார்கள் வரை இருக்கும். மேலும் 8 இருக்கைக்கு மேல் உள்ள ஒவ்வொரு கூடுதல் இருக்கைக்கும் 2 தினார்கள் வருடாந்திர காப்பீடு செலுத்த வேண்டும்.
மோசடிகள் காரணமாக காப்பீட்டுத்தொகை பெற புதிய நிபந்தனைகள் அறிவிப்பு:
1) வாகன உரிமையாளர்களிடமிருந்து காப்பீட்டு பிரீமியங்களை ரொக்கமாகப்(பணமாக)பெற உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. பிரீமியம் தொகையை கேநெட்(K-net) அல்லது வங்கி காசோலைகள் மூலமாக மட்டுமே ஏற்றுக்கொள்ளுமாறு காப்பீட்டு நிறுவனங்களுக்கு அமைச்சகம் கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.
2) காப்பீட்டு பிரீமியங்கள் மூலம் பணமோசடி பரிவர்த்தனைகள் நடைபெறுவது கண்டறியப்பட்டதை அடுத்து இந்த முடிவு வந்துள்ளது.
3) அதே நேரத்தில், திருத்தப்பட்ட விகிதம் தற்போதைய காப்பீட்டு விகிதத்திலிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்காது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
4) இருப்பினும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் என்று பெயர் அளவில் மட்டுமே இயங்குகின்ற சில நிறுவனங்கள் வாகனங்களுக்கு குறிப்பிட்ட தொகைக்கும் மற்றும் பாதி விகிதத்திலும் கட்டாய காப்பீட்டை வழங்கி வருவது முற்றிலுமாக தடுக்க முடியும்.
இந்த திருத்தப்பட்ட புதிய முடிவால் மேல்குற்றிபிட்ட பல திருட்டு வேலைகள் முற்றிலுமாக ஒழிக்கப்படும்.