குவைத்தின் Fahaheel தொழில் முனையப் பகுதியில் இன்று தீ விபத்து ஏற்பட்டது:
நவம்பர்-5,2020
குவைத்தில் Fahaheel தொழில்துறை பகுதியில் இன்று மதியம் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது. குவைத் தீயணைப்பு படையின் ஐந்து பிரிவுகள் இன்று பிற்பகல் தீப்பிடித்த இடத்திற்கு விரைந்து வந்து போராடி தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.
தீ விபத்து ஏற்பட்ட தொழில் முனையம் மரம் சார்ந்த பொருட்கள் மற்றும் எளிதில் தீபற்றி எரியும் ரசாயனங்கள் விற்பனை உள்ளிட்டவை நடைபெறும் பகுதியாகும்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு அதிகாரிகள் உத்தரவிடப்பட்டுள்ளது. அதிஷ்டவசமாக இதில் யாரும் பாதிப்புகள் ஏற்படவில்லை என்று தீயணைப்பு துறை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.