குவைத் உள்துறை அமைச்சகம் பொதுமன்னிப்பு தொடர்பான செய்தியை சற்றுமுன் வெளியிட்டுள்ளது:
Nov-24,2020
குவைத் உள்துறை அமைச்சகம் இன்று செவ்வாய்க்கிழமை(24/11/20) அபராதத்துடன் பொதுமன்னிப்பை அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று குவைத் செய்திதாள்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், சற்றுமுன் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகியுள்ளது.
அன்றைய செய்தி Link:https://ktpnews.blogspot.com/2020/11/blog-post_96.html
அந்த செய்தியில் உள்துறை அமைச்சகம் தொழில் விசா மீறல் Work permit) செய்பவர்களையும் மற்றும் நாட்டில் நுழைந்த தற்காலிக விசா( Enter Visa அனைத்து தரப்பு விசாவும் அடங்கும்) வைத்திருப்பவர்களையும் தங்கள் நிலையைத் திருத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. யார் யாருக்கு இந்த அறிவிப்பு பொருந்தும் என்றால் 1 ஜனவரி 2020 மற்றும் அதற்கு முன்னரும் உள்ள விசா(இகாமா) விதியை மீறியவர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்த முடியும்.
(தெளிவாக பார்க்க புகைப்படத்தின் மீது ஒரு Click செய்யவும்(உள்துறை அமைச்சக ஹிந்தி அறிவிப்பு))
இதற்காக விசா புதுப்பித்தல் செய்ய விரும்பும் நபருக்கு 1/12/2020 முதல் 31/12/2020 வரை நீங்கள் குடிவரவுத் துறை அலுவலகம்(Residency Affairs Department ) சென்று அபராதத் தொகையை செலுத்தி விதிகளுக்கு உட்பட்டு தங்கள் விசாவை புதுப்பித்தல் செய்து தொடர்ந்து இங்கு தங்கலாம். மேலும் நாட்டை விட்டு வெளியேற விரும்பும் நபர் அபராதத் தொகையை செலுத்த வேண்டும், தொடர்ந்து பயண அறிவிப்பு வழங்கப்பட்ட பின்னர், இந்த பொதுமன்னிப்பு காலகட்டத்தில் அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியமாக இருக்கும். இதனால் அவர்கள் இந்த நாட்டிற்கு மீண்டும் வேலைக்காக திரும்புவது சாத்தியமாகும்.
(தெளிவாக பார்க்க புகைப்படத்தின் மீது ஒரு Click செய்யவும்)உள்துறை அமைச்சக ஆங்கில பதிவு))
ஆனால் உள்துறை அமைச்சகம் பொதுமன்னிப்புக்காக நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் தனது விசா புதுப்பித்தல் செய்வதற்கு விண்ணப்பிக்காத நபர்களுக்கு எதிராக அனைத்து சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும், அவர் நாட்டிலிருந்து நிரந்தரமாக வெளியேற்றப்படுவதுடன்,மீண்டும் குவைத் திரும்ப அனுமதிக்கப்படமாட்டார்.
தற்காலிக குடியிருப்பு வைத்திருப்பவர்(Article-14) பின்வரு விதிமுறைகள்:
அவர்களுக்கு வழங்கப்பட்ட இகாமா காலம் முடிவடைவதற்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேற வேண்டியது அவசியம், அதாவது 30/11/2020 க்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் அல்லது 30/11/2020 க்கு முன்னர், இது தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி குடியிருப்பு(வேலை விசா) பெறுவதன் மூலம் உங்கள் நிலையை சரிசெய்து தொடர்ந்து குவைத்தில் தங்கலாம்.
இவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் தனது நிலைப்பாட்டை திருத்திக்கொள்ளாத தற்காலிக விசா வைத்திருக்கும் வெளிநாட்டு அனைவரும் விசா சட்டத்தை மீறியவர்கள் கீழ் வருவார், மேலும் அவருக்கு எதிராக அனைத்து சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும், அவர் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு மீண்டும் குவைத்தில் நுழைய ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
Editor: Ktpnews Official