குவைத்தின் Salmiya வெளிநாட்டினர் வாழ்வதற்கு மிகவும் மோசமான நகரமாக தேர்வு:
Nov-27,2020
குவைத்தின் சல்மியா உலகில் வெளிநாட்டினர் வாழ்வதற்கு மிக மோசமான நகரமாக தேர்வு செய்யபட்டுள்ளது. ஸ்பெயின் மிகப்பெரிய நகரமான வலென்சியா வெளிநாட்டினர் வாழ சிறந்த நகரமாக முதல் இடத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச நாடுகளில் உள்ள சிறந்த நகரங்களின் எக்ஸிட் இன்சைடர் 2020 அறிக்கையின் அடிப்படையில் சால்மியா 66-வது இடத்தில் உள்ளது. ரோம் 65-வது இடத்திலும், சியோல் 64-வது இடத்திலும் உள்ளன.
முக்கியமாக ஸ்பானிஷ் நகரங்களின் மூன்று இடங்கள் எக்ஸிட் சிட்டி தரவரிசை 2020 கணக்கெடுப்பில் முதல் பத்து இடங்களுக்குள் வந்துள்ளது. அலிகாண்டே 2-வது இடத்திலும், மலகா 6-வது இடத்திலும் மற்றும் தலைநகரான மாட்ரிட் 9-வது இடத்தையும் தக்கவைத்துள்ளது.