Dec-12,2020
குவைத்திற்கு தங்கள் வீட்டுத் தொழிலாளர்களை திரும்பி அழைக்க அறிமுகம் செய்யப்பட்ட இணையதளத்தில் சுமார் 1000 Sponsores-கள்(அரபிகள்) பதிவு செய்து உள்ளனர். கொரோன காரணமாக அதிக ஆபத்துள்ள நாடுகளில் இருந்து வீட்டுத் தொழிலாளர்கள் குவைத் சர்வதேச விமான நிலையத்திற்கு திரும்பி அழைக்கும் திட்டத்தின் கீழ் முதல் விமானங்கள் திங்கள்கிழமை வரும் என்று சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டிஜிசிஏ) அறிவித்தது.
தொழிலாளர்களை திரும்பி அழைக்கும் திட்டத்தில் முதல்கட்டமாக இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் அங்கீகாரம் பெற்ற மருத்துவ ஆய்வகங்களிலிருந்து வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சகம், சுகாதார அமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒருங்கிணைந்து பரிசோதனை செய்வதற்காக நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக, அல்- கபாஸ் தினசரி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆன்லைன் இணையதளத்தில் வீட்டுத் தொழிலாளர்கள் திருப்பி அழைக்க பதிவு செய்துள்ள குடிமக்களின் எண்ணிக்கை, சுமார் 1000 எட்டியுள்ளதாக சம்பந்தப்பட்ட துறையின் ஆதாரத்தை மேற்கோள் காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆன்லைனில் விமானங்களை முன்பதிவு செய்வதற்கும், பி.சி.ஆர் சோதனையை ஏற்பாடு செய்வதற்கும், முடிவுகளைப் பார்ப்பதற்கும் குறிபிட்ட தளத்தில் ஏற்பாடுகள் செய்துள்ளதால் ஆன்லைனில் பதிவு செய்யும் Sponsore-களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தினசரி குறிப்பிட்டது.
முதல் முறையாக இந்தியாவின் சென்னை மற்றும் டெல்லி விமான நிலையங்களில் இருந்து இரண்டு குவைத் ஏர்வேஸ் விமானங்கள் மற்றும் இரண்டு அல்-ஜசீரா ஏர்வேஸ் விமானங்கள் உட்பட 4 விமானங்கள் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. இதுபோல் செவ்வாயன்று, பிலிப்பைன்ஸிலிருந்து முதல் விமானங்கள் குவைத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 600 வீட்டுத் தொழிலாளர்களை அழைத்துவர திட்டமிட்டுள்ளது
ஆனால் பங்களாதேஷில் இருந்து வீட்டுத் தொழிலாளர்கள் திரும்புவதற்கான ஒப்புதல் இதுவரையில் வழக்கவில்லை எனவும், டாக்காவிலிருந்து முதல் விமானம் டிசம்பர் 24 அன்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வீட்டுத் தொழிலாளர்களை திரும்பி அழைத்துவரும் திட்டத்தில் குவைத் தேசிய விமான சேவை நிறுவனம்(NISA) பயன்படுத்தப்படும், வீட்டுப் பணியாளர்களை தங்க வைக்க Bneid Al-Gar, Kuwait City, Salmiya, Fintas, Farawaniyah, Al-Raqi,Mahboula மற்றும் Abu Halifa உள்ளிட்ட பல இடங்களில் ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் ஒருங்கிணைந்துள்ளது. இந்தியாவின் 6 இடங்களில் இருந்து விமானங்கள் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன, விமானங்களின் முன்பதிவு அடிப்படையில் வரும் நாட்களில் அது தொடர்பான கூடுதல் தகவல்கள் வெளியாகும்.