Dec-10,2020
குவைத்தில் இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சர் டாக்டர்.பசில்-அல்-சபா, சர்வதேச அதிகாரப்பூர்வ அமைப்புகளின் ஒப்புதலுக்குப் பிறகு நாட்டில் தடுப்பூசி வழங்கப்படும் என்பதை உறுதிப்படுத்தினார், நடப்பு ஆண்டின் இறுதிக்குள் அங்கீகாரம் கிடைக்கும் என்றும், பின்னர் தடுப்பூசி பல கட்டங்களாக முன்னுரிமைகளின் அடிப்படையில் வழங்கபடும் என்றார்.
மேலும் தடுப்பூசி குவைத்திற்கு வந்தவுடன் உடனடியாக குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு வழங்குவதற்கு நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது என்றும், இதற்காக குவைத்தின் FairGrounds, Al-Jahra மற்றும் Al-Ahmadi பகுதிகளில் ஏற்பாடு செய்யும் மையங்களில் வைத்து வழங்கப்படும். ஒரு நாளைக்கு 10,000 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தடுப்பூசி பெறுவதற்காக Pfizer உள்ளிட்ட 3 நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும். மொத்தம் 9 வகை தடுப்பூசிகள் உள்ளது என்றும், அவற்றில் இருந்து சிறந்த தடுப்பூசி தேர்ந்தெடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.