BREAKING NEWS
latest

Friday, December 11, 2020

மக்கா கிரேன் விபத்து 110 பேர் உயிழப்பு தொடர்பாக; குற்றம் சாட்டப்பட்ட 13 பேரையும் நீதிமன்றம் விடுவித்தது:


Dec-11,2020

மக்காவில் ஏற்பட்ட கிரேன் விபத்து தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 13 பேரை நீதிமன்றம் விடுவிக்கிறது, பின்லேடன் குழு உட்பட உள்ளிட்ட  குற்றம் சாட்டப்பட்டவர்களை மக்கா குற்றவியல் நீதிமன்றம் விடுவித்தது. முந்தைய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டில் செய்ய வழக்கில், குற்றவியல் நீதிமன்றம், மீண்டும் வாதம் கேட்டது. இந்த வழக்கில் புதிதாக எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று நீதிமன்றம் கூறியது.புதிய தீர்ப்பு தொடர்பான நகல் மேல்முறையீடு நீதிமன்றத்தின் ஆய்வுக்கு அனுப்பப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2015-ல் மக்காவில் கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 108 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு உலகமே அதிர்ந்தது. இந்த விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஹஜ் யாத்ரீகர்கள் பலரும் உயிரிழந்ததனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும்  இந்த விபத்தில் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மக்காவை புதுப்பிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த கிரேன் சரிந்து விழுந்து இந்த விபத்து ஏற்பட்டது. இது 200 மீட்டர் உயரமும் 1350 டன் எடையும் கொண்டது. அன்றைய தினம் மக்காவில் ஏற்பட்டபலத்த காற்றைத் தொடர்ந்து ஹராம் பகுதியில் நின்றிருந்த யாத்ரீகர்கள் மீது கிரேன் சரிந்து விழுந்தது.

இந்த வழக்கில் ஒப்பந்தக்காரர்களான சவுதி பின்லேடன் நிறுவனத்தின் அதிகாரிகள் உட்பட 170 க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடந்தது. சம்பவம் நடந்த நாளில் மக்காவின் வளாகத்தில் பலத்த காற்று மற்றும் மழையால் விபத்து ஏற்பட்டதாகவும், விபத்து மனித பிழையாக பார்க்கப்படக்கூடாது என்ற சம்பந்தப்பட்ட நபர்களின் வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

மேலும் விபத்து நடந்த நாளில், புயல் ஏற்படும் என்பது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை எனவும், மேலும் காற்றின் வேகம் மணிக்கு 38 கிலோமீட்டர் வரை இருந்தது என்று குற்றம் சுமத்தப்பட்ட நபர்களின் வக்கீல்  வாதித்தனர், இதையும்  நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. மேலும் இந்த வழக்கில் குற்றவியல் நீதிமன்றம் இதேபோன்ற தீர்ப்பை 2017 லும் வெளியிட்டது. ஆனால், 2018 விசாரணையில், குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடைய இந்த புதிய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Add your comments to மக்கா கிரேன் விபத்து 110 பேர் உயிழப்பு தொடர்பாக; குற்றம் சாட்டப்பட்ட 13 பேரையும் நீதிமன்றம் விடுவித்தது:

« PREV
NEXT »