BREAKING NEWS
latest

Tuesday, December 15, 2020

அமீரகத்தில் உணவு கூட வழங்காமல் கொடுமை 12 இந்திய பெண்கள் மீட்பு:

Dec-15,2020

ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்ள அஜ்மானில் போலியான ஏஜெண்ட் மூலம் ஏமாற்றப்பட்டு சிக்கியிருந்த 12 இந்திய வீட்டுப் பணியாளர்களை இந்திய துணைத் தூதரகம் மற்றும் சமூக ஆர்வலர்கள் உதவியுடன் மீட்டுள்ளனர்.

ஒரு போலியான ஏஜென்சியிடம் பெரிய தொகையை கட்டணமாக  செலுத்திய பின்னர், அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு Visiting விசாவில் அமீரகம் வந்தனர். இவர்கள் அனைவரும் 21 முதல் 46 வயதுக்குட்பட்டவர்கள். அவர்களுக்கு வேலை வழங்குவதாக அழைத்து வந்து உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டனர்.  பெரும்பாலும் உணவு கூட வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக அஜ்மான் போலீசார் ஒரு இடைத்தரகரை கைது செய்துள்ளனர். பெண்கள் அனைவரும் அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டு அறைகளில் பூட்டப்பட்டிருந்தனர். அஜ்மான் இந்திய சங்கத்தின் பொதுச் செயலாளர் ரூப் சித்து கூறுகையில் ஒரு அறையில் ஏழு பேரும், மற்றொரு அறையில் ஐந்து பேரும் பூட்டப்பட்டு இருந்தனர்.

அவர்களில் ஐந்து பேரின் உறவினர்கள் அமீரகத்தில்  உள்ள சமூக ஆர்வலர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட தெரிவித்ததையடுத்து இந்திய தூதரகம் தலையிட்டது. இதையடுத்து 12 இந்திய பெண்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய துணைத் தூதரகத்தின் தகவல் மற்றும் கலாச்சார பிரவு தூதர் நீரஜ் அகர்வால் தெரிவித்தார். அவர்களில் 7 பேர் போலீசில் புகார் அளித்தனர். தொடர்ந்து 12 பேரில் இருவர் இந்தியா திரும்பினர் மற்றவர்கள் வரும் நாட்களில் தாயகம் திரும்புவார்கள்

Add your comments to அமீரகத்தில் உணவு கூட வழங்காமல் கொடுமை 12 இந்திய பெண்கள் மீட்பு:

« PREV
NEXT »