குவைத்திற்கு இந்தியாவில் இருந்து முதல் நேரடி விமானம் டிசம்பர்-14 வருகிறது:
குவைத்திற்கு கொரோன பிரச்சனை காரணமாக இந்தியா, இலங்கை உள்ளிட்ட 34 நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் நேரடியாக நுழைய தடை கடந்த பல மாதங்களாக நிலுவையில் உள்ளது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு முதல்கட்டமாக இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளி்ல் இருந்து வீட்டுத் தொழிலாளர்கள்(Article-20 Visa) மட்டும் கொரோனா சுகாதார கட்டுப்பாட்டுகள் பின்பற்றி நேரடியாக நுழைய அனுமதி வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் டிசம்பர்-7 முதல் அனுமதி நடைமுறையில் உள்ளது.
தொழிலாளர்களை அழைத்துவர விரும்பும் முதலாளிகள்(ஸ்பான்சர்) அதற்காக நேற்று முதல் இயக்கத்திற்கு வந்துள்ள புதிய சிறப்பு ஆன்லைன் பதிவு தளமான "அல்-சலாமா" தங்கள் தொழிலாளர்கள் விபரங்கள் மற்றும் கட்டணத்தல் பாதி கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்யலாம்.
இணையதள Link: http://belsalamah.com
தடை விதிக்கப்பட்ட 34 நாடுகளில் இருந்து தடைநீங்கிய பிறகு முதல்முறையாக குவைத்தில் நேரடியாக நுழையும் தொழிலாளர்கள் இந்தியர்கள் என்பதை நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
இந்தியாவின் 6 விமான நிலையங்களில் இருந்து தொழிலாளர்களை அழைத்துவர திட்டமிட்டுள்ளதாக தகவலும் வெளியாகியுள்ளன. தொழிலாளர்கள் குவைத்திற்கு திரும்பும் நிலையில் விமான நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் கடைசி கட்டத்தில் உள்ளது. பெண்கள் மற்றும் ஆண்கள் என்று தனித்தனியாக 14 நாட்கள் தனிமைப்படுத்த(தங்கவைக்க) 58 கட்டிடங்கள் வரையில் தயார் நிலையில் உள்ளது என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.