குவைத்தின் 18-வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகளின் விபரங்கள் தமிழில்:
குவைத்தில் நேற்று நடைபெற்ற 18-வது பாராளுமன்ற தேர்தலின் முடிவுகள் இன்று(06/12/20) ஞாயிற்றுக்கிழமை காலையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 5 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 66 சதவீதம் வாக்குகள் சராசரியாக பதிவாகியுள்ளது. இதில் ஒன்று, இரண்டு, மூன்று தொகுதிகளில் 70 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.நான்காவது மற்றும் ஐந்தாவது தொகுதிகளில் 60 சதவீதம் வாக்குகள் பாதிவாகியுள்ளது.
இந்த தேர்தலின் முடிவுகளை பொறுத்தவரை இஸ்லாமியவாதிகள் மற்றும் பழங்குடி பிரிவினர் ஆதிக்கம் செலுத்தியுள்ளதை காட்டுகின்றன. இந்தமுறை போட்டியிட்ட 29 பெண்களில் யாரும் வெற்றி பெறவில்லை. ஒரே சிட்டிங் பெண் எம்.பி.யான சஃபா அல்-ஹாஷிமி மூன்றாவது தொகுதியில் போட்டியிட்டு கடும் தோல்வியை சந்தித்தார். கடந்த தேர்தலில் மூன்றாவது தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சருமான முகமது அல்-ஜுபைர் தோற்கடிக்கப்பட்டார்.
இந்த முறை 43 சிட்டிங் எம்.பி.க்கள் மக்கள் தீர்ப்பை எதிர்பார்த்து மீண்டும் போட்டியிட்டனர். இவர்களில் 24 பேர் தோற்கடிக்கப்பட்டு 19 பேர் மட்டுமே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 50 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் இந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 31 பேர் புதியவர்கள் ஆவார்கள். சபாநாயகர் மர்சுக்-அல்-கானம் இரண்டாவது தொகுதியிலிருந்து அதிக வாக்குகள் பெற்று மீண்டும் வெற்றி பெற்றார்.வெற்றியாளர்களில் ஒசாமா அல்-ஷாஹீன், ஹசன் அல்-ஜஹர், கலீல் அல்-சலே, அட்னான் அப்துல் சமத், ஈசா அல்-காந்தாரி, முபாரக் ஹஜ்ரஃப், அப்துல் கரீம் அல்-காந்தரி, மற்றும் ஒசாமா அல்-முனாவ்வர் ஆகியோர் முக்கிய பிரமுகர்கள் ஆவார்கள்.
இந்த தேர்தலில் ஐந்தாவது தொகுதியைச் சேர்ந்த ஹம்தான் சலீம் அல்-அஸ்மி அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார், அவர் மொத்தமாக 8387 வாக்குகளைப் பெற்றார். முதல் தொகுதியில் இருந்து வெற்றிபெற்ற ஒசாமா அல்-ஷாஹீன் தான் இந்த தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் ஆவார், அவர் 2167 வாக்குகளைப் பெற்றார்.
கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இந்த முறை தேர்தல் நடைபெற்றது. ஐந்து தொகுதிகளில் சேர்த்து மொத்தம் 567694 வாக்காளர்கள் ஓட்டுபோடும் உரிமை உள்ளவர்கள் ஆவார்கள். இந்த தேர்தலில் 29 பெண்கள் உட்பட 326 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் அதிக வாக்குகளைப் பெறும் 10 வேட்பாளர்களால் வெற்றியாளர்களை அறிவிப்பார்கள். தேர்தல் முடிவுகள் இன்று அதிகாலை வெளிவந்த வண்ணம் இருந்தது. மூன்றாவது தொகுதியில் வாக்குகள் எண்ணுவது தொடர்பான தகராறு ஏற்பட்டதன் காரணமாக முடிவுகள் அறிவிப்பு தாமதமானது.
நாடாளுமன்றத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர் மற்றும் விவரங்கள் மண்டலங்கள் வரியாக பின்வருமாறு:
முதல் மண்டலம்:
1 ஹசன் ஜஹர்
2. யூசுப் பஹத் குரைப்.
3.அஹ்மத் கலீஃபா
4. முஹம்மது அகமது அலி.
5. இசா அஹ்மத் அல் காந்தரி
6. அலி அப்துல் ரசூல் அல் கட்டான்
7. அட்னான் அப்துல் சமத்
8. அப்துல்லா அல் துராஜி
9. அப்துல்லா ஜாசிம் அல் மடாஃப்
10. ஒசாமா அல் ஷாஹீன்
இரண்டாவது மண்டலம்:
1.மர்சூக் அல் கானம்.
2. முஹம்மது பராக் அல் முத்தேர்
3. கலீல் இப்ராஹிம் அல் சலேஹ்
4. ஹமத் முஹம்மது அல் மாதர்
5. சல்மான் காலித் அல் அஸ்மி
6. காலித் அய்யாத் அல் அஸ்மி
7. பத்ர் நாசர் அல் ஹுமைடி
8. பத்ர் ஹமீத் அல் முல்லா
9.ஹமாத் சைஃப் அல்-ஹர்ஷானி
10.அஹ்மத் முகமது அல் ஹமாத்
மூன்றாவது மண்டலம்:
1. அப்துல் கரீம் அல் காந்தரி
2. ஒசாமா முனாவ்வர்
3. முஹம்மது அல் சையர்
4. ஹிஷாம் அப்துல் சமத்
5. அப்துல் அஜீஸ் தாரிக்
6. யூசுப் சாலிஹ் ஃபடாலா
7. முபாரக் சையத் முத்தாரி
8. சாதூன் ஹம்மது அல் ஒட்டாயி
9. பரிஸ் சேயர் ஆட் ஒட்டாபி
10. முஹல் ஹால் காலித் அல் முடாஃப்
நான்காவது மண்டலம்:
1. சுஹைப் ஷபாப் முவைசரி
2. பயஸ் கன்னம் அல்-முத்தேரி
3.முசாத் அப்துல் ரஹ்மான் முத்தேரி
4. முஹம்மது உபைத் அல்-ராஜி
5. சவுத் சாத் அல் முத்தாரி
6. தமர் சாத் அல்-தீபீரி
7.மர்சூக் கலீஃபா
8.பராஸ் முஹம்மது டைஹானி
9. சாத் அலி அல்-ரஷிடி
10.முபாரக் ஹைஃப் ஹஜ்ரஃப்
ஐந்தாவது மண்டலம்:
1. ஹம்தான் சலீம் அல் அஸ்மி
2. பத்ர் சயீத் அஸ்மி
3. முபாரக் அப்துல்லா அஜ்மி
4. சைஃப் முபாரக் அஜ்மி
5. காலித் முஹம்மது ஒடாய்பி
6. ஹமூத் முபாரக் ஆஸ்மி
7. சாலிஹ் தியாப் முத்தேரி
8. நாசர் சாத் அல்-தோசேரி
9.முஹம்மது ஹாடி ஹுவைலா
10. அஹ்மத் அப்துல்லா அஸ்மி
இதற்கிடையே வெற்றிபெற்ற அனைத்து வேட்பாளரையும் குவைத் அமீர் அவர்கள் வாழ்த்தியுள்ளார் என்ற தகவலும்.இதுபோல் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தற்போதைய பாராளுமன்ற பிரதிநிதிகள் ராஜினாமா கடிதங்களை அமீர் ஏற்றுக்கொண்டார்