Dec-22,2020
குவைத்தில் உள்ள மக்களுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ள Pfizer-BioNTech COVID-19 தடுப்பூசியின் முதல் Batch நாளை(23/12/2020) புதன்கிழமை நாளை காலை குவைத் வந்தடையும் என்று சுகாதரத்துறை ஷேக் டாக்டர் பசில் அல்-சபா சற்றுமுன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதற்கான சிறப்பு விமானம் இன்று யு.எஸ் புறப்பட்டது என்றும்,விமான நிலையத்திலிருந்து, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லவும், பின்னர் அங்கிருந்து தடுப்பூசி மையங்களுக்கும் கொண்டு செல்ல தேவையான அனைத்த நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் இந்த வாரத்தின் இறுதியில் தடுப்பூசி பொதுமக்களுக்கு போடும் செயல்முறை தொடங்கும் என்று அவர் கூறியுள்ளார். தடுப்பூசி நான்கு கட்டங்களாக முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். இணையத்தளத்தில் தடுப்பூசி பெறுவதற்கான பதிவு செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை இதுவரை 73,700 எட்டியுள்ளது என்றும், பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அமைச்சர் அல்-சபா தெரிவித்துள்ளார்.