Dec-11,2020
குவைத்திலிருந்து வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தாயகத்திற்கு பணம் அனுப்புவது கணிசமாகக் குறைந்துவிட்டதாக புள்ளிவிவரங்கள் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், வெளிநாட்டவர்கள் 105.6 கோடி தினார்களை மொத்தமாக தங்கள் நாடுகளுக்கு அனுப்பியுள்ளனர்.
அதுபோல் இதே நிதியாண்டின் முதல் காலாண்டில் 135 கோடி தினார்கள் பணம் அனுப்பிய நிலையில் இந்த இரண்டு காலாண்டிற்கும் இடையே, தொழிலாளர்கள் தாயகம் அனுப்பிய பணவிகிதத்தில் 21.96 சதவீதம் குறைபாடு ஏற்பட்டுள்ளது. மேலும் 2020 முதல் பாதியில், வெளிநாட்டவர்கள் தாயகம் அனுப்பிய பணத்தில் 12.13 சதவீதம் அதிகரித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த அடுத்தடுத்த சரிவுக்கான முக்கியமான காரணம் கோவிட் பரவலும், பின்னர் அதைதொடர்ந்து நாட்டில் எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளும் காரணமாக அமைந்துள்ளது.மேலும் புள்ளிவிவரங்களின்படி, குடிமக்கள் பயணங்கள் தொடர்பான செலவு செய்யும் பணத்திலும் 93.14 சதவீதம் குறைவு ஏற்பட்டுள்ளது