ஓமானில் இருந்து வெளிநாட்டவர்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். இந்த ஆண்டு தொடக்கம் முதல் தற்போது வரையில் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
2020 தொடக்கம் முதல் இந்த 11 மாதங்களில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் ஓமானை விட்டு வெளியேறியதற்கான புள்ளிவிவரங்களை ஓமன் தேசிய புள்ளிவிவரங்களுக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஜனவரி மற்றும் நவம்பர் 2020 க்கு இடையில், 272,126 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஓமானிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஓமானில் 1,712,798 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருந்தனர். இது தற்போது 1,440,672 ஆக குறைந்துள்ளது. இப்படி தொடர்ந்து தொழிலாளர்கள் வெளியேறிய போதிலும், பங்களாதேஷியர்கள் ஓமானில் மிகப்பெரிய வெளிநாட்டு சமூகமாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அவர்களின் மக்கள் தொகை 630,681 இலிருந்து 552,389 ஆகக் குறைந்தது. இரண்டாவது இடத்தில் இந்தியர்கள் உள்ளனர். இந்தியர்களின் எண்ணிக்கை 617,730 லிருந்து 491,980 ஆக குறைந்தது.