சவுதி அரேபியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட மேலும் 252 இந்தியர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவருமீ தொழிலாளர் மற்றும் விசா சட்டங்களை மீறியதற்காக கைது செய்யப்பட்டார். ரியாத்தில் உள்ள நாடுகடத்தல் மையத்தில் தங்கியிருந்த இவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சவுதி ஏர்லைன்ஸ் விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டனர்.
இதில் தமிழ்நாட்டினர் 21 பேர் ,கேரளாவை சேர்ந்த 6 பேர் ,தெலுங்கானா மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த 16, பீகாரை சேர்ந்த 21, உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 96, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 53, ராஜஸ்தானைச் சேர்ந்த 11 என்று 252 பேர் தாயகம் திரும்பினர்.இவர்கள் அனைவருமே இகாமா புதுப்பிக்கப்படாதது, ஹுருப் வழக்கு மற்றும் தொழிலாளர் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் 64 பேர் தமாமில் கைது செய்யப்பட்டு ரியாத்துக்கு அழைத்து வரப்பட்டனர். மீதியுள்ள 188 பேர் ரியாத்தில் கைது செய்யப்பட்டவர்கள். இவர்கள் அனைவரும் அல்-கர்ஜ் சாலையில் உள்ள இஸ்கானில் கடத்தப்பட்ட புதிய நாடுகடத்தல் மையத்தில் (தர்ஹீல்) தங்க வைக்கப்பட்டனர்.
இந்திய தூதரக அதிகாரிகள் ராஜேஷ் குமார், யூசுப் கக்கஞ்சேரி, அப்துல் சமத் மற்றும் துஷார் ஆகியோர் நாடு திரும்புவதற்கான சட்ட நடவடிக்கைகளை நிறைவு செய்தனர். கோவிட் தொடங்கியது முதல் சவுதியில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கையை 3743 ஆக உயர்ந்துள்ளது.
கோவிட் நெருக்கடி தளர்த்தப்பட்டதால் சவுதி காவல்துறையினர் சட்டத்திற்கு புறம்பாக உள்ள நபர்களை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இந்தியர்கள் உட்பட பல வெளிநாட்டினர் தினசரி கைது செய்யப்படுகிறார்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டவர்கள் இறுதியில் ரியாத் மற்றும் ஜித்தாவில் உள்ள தர்ஹீலுக்கு அனுப்பப்படுகிறார்கள். கொரோனா பிரச்சினை துவக்கிய பிறகு இன்று சட்டத்தை மீறிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட இந்தியர்களை ஏற்றிக்கொண்டு டெல்லிக்கு புறப்பட்டது 13-வது சவுதி ஏர்லைன்ஸ் விமானம் ஆகும்