குவைத்தில் கடந்த நாளில் ஒரு வீட்டில் இருந்து இரகசிய தகவல் அடிப்படையில் நடத்திய சோதனையில் ஆயுதங்கள், உரிமம் பெறாத வெடிமருந்துகள், தீவிரவாத சின்னங்கள் மற்றும் கேமராக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் தொடர்புடைய ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டார் எனவும், அவனிடம் நடத்திய விசாரணையில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர் என்று செய்தி தளத்தில் வெளியிட்டோம்.
ஆனால் பலரும் இதை பொய்யான செய்தி என்று கூறினர். இந்நிலையில் சற்றுமுன் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இரண்டு நாட்களாக நடத்திய தீவிர விசாரணைக்கு பிறகு இவர்களில் 3 பேர் நிரபராதிகள் என்று கண்டறியப்பட்டு விடுவிக்கப்பட்டனர் என்ற செய்தியை வெளியிட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவருக்கு 15 வயதும் மற்றொரு நபருக்கு 16 வயதும், 3-வது நபர் வயதில் மூத்தவர் என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
உள்துறை அமைச்சகம் மேலும் கூறுகையில் பெற்றோர்களிடம் குழந்தைகள் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தவும், அவர்களை பாசமாக அணுகவும், அவர்களின் கவலைகளைக் கேட்கவும், சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் போது அதில் உள்ள பிரச்சினைகள் பற்றி விவாதிக்கவும், ஆலோசனை செய்யவும், கண்காணிக்கவும் அழைப்பு விடுத்துள்ளனர். இதன் மூலம் குற்றவாளியாக தண்டனை பெற்று வாழ்க்கையினை இழப்பதை தவிக்க முடியும் என்ற விழிப்புணர்வை வெளியிட்டுள்ளது.