குவைத்தில் உள்ள குடியிருப்புகளின் பால்கனிகளிலும், ஜன்னல்களிலும் துணி அல்லது தரைவிரிப்புகளை தொங்க விடுவதை முற்றிலுமாக தடை செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்படி செய்யும் நபர்களுக்கு 300 தினார்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்று, நாட்டின் Capital நகராட்சித் துறை அலுவலக பொதுத்றை சுத்தம் மற்றும் சாலைப் பணிகள் இயக்குநர் மிஷால் அல் அஸ்மி உறுதிப்படுத்தினார்.
இதன் ஒருபகுதியாக சட்டத்தை மீறுபவர்களைக் கைது செய்வதற்காக நாட்டின் பல பகுதிகளிலும் களப் பிரச்சாரங்களை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர். குறிப்பாக நாட்டின் தலைநகரம் மற்றும் பினீட் அல்-கார் ஆகிய இடங்களில் கட்டிடங்களின் பால்கனிகள், இதுபோன்ற செயல்களால் மாசுபடுகின்றன என்று நகராட்சியின் பொறியியல் இயக்குநர் தினசரி பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
இதற்கான முக்கிய காரணம் நாட்டில் உயர்ந்து வருகின்ற Bachelors எண்ணிக்கை என்று அவர் மேலும் தெளிவுபடுத்தினார். சோதனையின் போது இப்படிப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டுள்ள கட்டிடத்தின் ஹாரிஸை முதல்கட்டமாக எச்சரிக்கை செய்யும் என்றும், அதே செயலை மீண்டும் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்