குவைத் எகிப்து தூதரகத்தின் முன்னால் இருந்து 3000 தினார்களைக் கண்டுபிடித்த பிறகு நேர்மையான ஆசிரியர், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை பலர் நேற்று முதல் பகிர்வு செய்து வருகிறார்கள். மேலும் இந்த தொகையின் உரிமையாளரை தொடர்பு கொள்ள அவர் தொடர்பு எண்ணையும் வெளியிட்டுள்ளார்.
Contact: 60401332
இது தொடர்பான குவைத் தினசரி பத்திரிக்கை அவரை பேட்டி எடுத்துள்ளது. அதில் அவர் தன்னுடைய பெயர் தமர் ஹபீப் முஹம்மது மஹ்ரூஸ், நான் அல்-சலாம் பகுதியில் உள்ள அகமது அல்-ரபாய் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறேன், பள்ளியை விட்டு வெளியேறியதும் பாஸ்போர்ட்டை நீட்டிப்பது குறித்து அறிய தூதரக தலைமையகத்திற்குச் சென்றேன், இதற்கிடையில் நான் திடிரென பெரிய தொகையை கொண்ட பை கண்டேன். அங்கிருந்த பலரிடம் இது தொடர்பாக கேட்டேன், ஆனால் யாரும் எனக்கு பதிலளிக்கவில்லை, இதை தொடர்ந்து வீடியோ வெளியிட்டேன் என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில் பை மற்றும் அதில் உள்ள சரியான தொகையை சம்பந்தப்பட்ட நபர் விவரிக்கும் வரை நான் சில நாட்களுக்கு காத்திருப்பேன், யாரும் என்னை அழைக்கவில்லை என்றால், காவல் நிலையத்தில் பணத்தை ஒப்படைப்பேன் என்றார்.
இந்த மனிதாபிமான வேலைக்கு உங்களுக்கு வெகுமதி எதுவும் தேவையில்லையா என்று கேட்டதற்கு ....??
இல்லை, நான் அதை விரும்பவில்லை, ஏனென்றால் கடவுளின் இன்பத்தைத் தவிர வேறு எதையும் நான் விரும்பவில்லை என்று சிரிப்புடன் பதில் அளித்தார்.
தொடர்ந்து பேட்டி எடுத்தவர் ஆசிரியரிடம் பணம் மோசடிக்கு உட்படக்கூடாது என்பதற்காக காவல் நிலையத்தில் ஒப்படைத்து உரிமையாளருக்கு வழங்குமாறு பரிந்துரைத்தார்.