குவைத்திற்கு 34 நாடுகளில் இருந்து பின்வரும் நபர்கள் நேரடியாக நுழைய அனுமதி:
Dec-09,2020
குவைத்திற்கு தடை விதிக்கப்பட்ட 34 நாடுகளில் இருந்து சுகாதார அமைச்சகத்தின் கீழ் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களுக்கும், அவர்களின் இரத்த சொந்தம்,அதாவது வேலை செய்யும் நபர் மனைவி என்றால் கணவர் அல்லது கணவர் வேலை செய்தால் அவரின் மனைவி, குழந்தைகள் மற்றும் பிற உறவினர்கள் நுழைவு தடைசெய்யப்பட்ட நாடுகளில் இருந்து நேரடியாக குவைத் திரும்புவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இது தொடர்பான அறிவிப்பை குவைத் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இருப்பினும், திரும்பி வருபவர்களுக்கு செல்லுபடியாகும்(Validity Visa) Residence விசா அல்லது செல்லுபடியாகும் நுழைவு விசா(Enter Visa) இருக்க வேண்டும்.
சுகாதார அமைச்சகத்தால் வரையறுக்கப்பட்ட கோவிட் நெறிமுறைக்கு இணங்க அனுமதி வழங்கப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.